டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியின் புதிய ஆளுநர் நியமனம் - யார் இந்த வினய் குமார் சக்சேனா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தலைநகரும் யூனியன் பிரதேசமுமான டெல்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த அனில் பைஜால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஆளுநராக வினய் குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

1969 பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனில் பைஜால் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியின் துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

6 ஆண்டுகளாக டெல்லி ஆளுநராக பணிபுரிந்து வந்த 76 வயதான அனில் பைஜால் கடந்த 18 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஹெல்மெட் இல்லையா? போலீஸ் என்றும் பார்க்க மாட்டோம் - சமூகவளைதள பதிவுகளை வைத்து நடவைக்கை- ஆணையர் ஹெல்மெட் இல்லையா? போலீஸ் என்றும் பார்க்க மாட்டோம் - சமூகவளைதள பதிவுகளை வைத்து நடவைக்கை- ஆணையர்

புதிய ஆளுநர்

புதிய ஆளுநர்

அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்‌ஷேனா இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

யார் இந்த வினய் குமார்?

யார் இந்த வினய் குமார்?

மத்திய காதி மற்றும் கிராமபுற தொழில்துறை ஆணையத்தின் தலைவராக பணிபுரிந்து வந்த வினய் குமார் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 2016 முதல் 2020 வரை, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகளை மதிப்பிடுவதற்கான குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சக்சேனா ஆண்டு தோறும் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலை

ஜவஹர்லால் நேரு பல்கலை

கடந்த 2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் பார்வையாளர் என்ற வகையில், சக்சேனாவை டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இது இந்த நிறுவனத்தின் மிக உயர்ந்த அமைப்பான பல்கலைக்கழக நீதிமன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகள் செயல்பட பரிந்துரைத்தார். கடந்த 2020 ல் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) - இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் பயோரிசோர்ஸ் டெக்னாலஜியுடைய ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.

பத்ம விருது தேர்வுக் குழு

பத்ம விருது தேர்வுக் குழு

இமயமலை உயிர் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் அதிநவீன அறிவியலைப் பயன்படுத்தி அவற்றின் செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளைக் கண்டறிந்து, மேம்படுத்துவது மற்றும் வணிகமயமாக்குவதற்கான அதிகாரத்தை கொண்டது இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டுக்கு பத்ம விருதுகளை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார் சக்‌ஷேனா.

English summary
Vinay Kumar appointed as Lieutenant Governor of Delhi by President of India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X