34-வது வெளியுறவுத் துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ரா இன்று பதவியேற்பு- நேபாள தூதராக நவீன்!
டெல்லி: நாட்டின் 34-வது வெளியுறவுத் துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ரா இன்று பதவியேற்கிறார். இதையடுத்து வினய் மோகன் குவாத்ராவுக்கு பதிலாக நேபாளத்துக்கான புதிய இந்திய தூதராக நவீன் ஶ்ரீவத்சவா நியமிக்கபடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் வெளியுறவுத் துறை செயலாராக பணியாற்றிய ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து வினய் மோகன் குவாத்ரா இன்று புதிய வெளியுறவுத் துறை செயலாளராகப் பொறுப்பேற்கிறார். நேபாளத்துக்கான இந்திய தூதராகப் பணியாற்றி வந்தார் வினய் மோகன்.

1965-ம் ஆண்டு பிறந்த வினய் மோகன் குவாத்ரா, கடந்த 1988-ல் நாட்டின் வெளியுறவுத்துறை பணியில் இணைந்தார். 1993-ம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்திய டீமில் 3-ம் நிலை செயலாளராகப் பணியாற்றினார். 2003-ல் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரகத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2006-ல் பெய்ஜிங், இந்திய தூதரகத்தின் துணைத் தலைவரானார்.
2006-2010-ல் சார்க் அமைப்பின் இந்திய பிரதிநிதியாக நேபாளம் நாட்டில் பணியாற்றினார். 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்க விவகாரங்கள் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 முதல் 2020 வரை பிரான்ஸுக்கான இந்திய தூதராகவும் 2020 முதல் நேபாளத்துக்கான இந்திய தூதராகவும் வினய் மோகன் பணியாற்றினார். 2020 முதல் இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை வினய் மோகன் குவாத்ரா வெற்றிகரமாக கையாண்டார். இதனைத் தொடர்ந்து இன்று நாட்டின் 34-வது வெளியுறவுத் துறை செயலாளராகப் பதவி ஏற்கிறார் வினய் மோகன் குவாத்ரா.
இதனைத் தொடர்ந்து நேபாளத்துக்கான இந்திய தூதராக நவீன் ஶ்ரீவத்சவா நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 1993 ஐ.எப்.எஸ். பேட்ச் அதிகாரி நவீன் ஶ்ரீவத்சவா. இவர் சீனா விவகாரங்களை ராஜதந்திரமாக கையாள்வதில் வல்லவர் என்கின்றன வெளியுறவுத்துறை வட்டாரங்கள்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications