முழுக்க முழுக்க அரசியல் மட்டும்தான்.. பி.டி.உஷா மீது வினேஷ் போகத்.. பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: பாரிஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பி.டி. உஷா தன்னைச் சந்தித்தபோது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், தனக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் நடிக்க மட்டுமே செய்தார். இது முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என்று வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்ட ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதிக எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். இச்சம்பவம் அனைத்து தரப்பினரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு ஆதரவு கரம் நீண்டன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத்துக்கு உடல்நலக் குறைவு காரணமாக பாரீஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வினேஷ் போகத்தை இந்திய தடகளச் சங்கத் தலைவர் பி.டி.உஷா சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். அச்சமயத்தில், வினேஷ் போகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பி.டி.உஷா வெளியிட்டிருந்தார்.
அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா திரும்பிய வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இறங்கி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரீஸில் நடந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள வினேஷ் போகத் கூறியுள்ளதாவது: பாரிஸீல் எனக்கு எந்தவகையிலான ஆதரவு கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்னைச் சந்திக்க வந்த பி.டி.உஷா எனது அனுமதியின்றி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதேபோலத்தான் பாரீஸிலும் அரசியல்தான் நடந்தது. இதனால், மனதளவில் நான் மிகவும் உடைந்து பேனேன். மல்யுத்தத்தை கைவிட வேண்டாம் என்று பலரும் கூறினர். எதற்காக மல்யுத்தத்தை நான் தொடர வேண்டும். எல்லா இடங்களிலும் அரசியல் உள்ளது. நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை.
வாழ்வில் மிகவும் கடினமான கட்டத்தை நான் கடந்து கொண்டிருந்தேன். அப்போது, பி.டி.உஷா எனக்கு ஆதரவு தருவதுபோல என் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்றுதான் ஒருவர் ஆதரவு தருவார்களா. இது முழுக்க முழுக்க அரசியல். முறையான நடவடிக்கை இல்லை. வெறும் நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தொடர்ந்து வினேஷ் போகத்தை விமர்சித்து வருகிறார். இதற்கு வினேஷ் போகத்தும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். ஹரியானா அரசியலில் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுவாக ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அதிகம். இதனால் பிரஜ் பூஷண் சரண் சிங்குக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பிரிஜ் பூஷண் சிங்கின் செயல் தங்களுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனாலும், பிரிஜ் பூஷண் சிங் அதை கேட்கவில்லை. வினேஷ் போகத்தை அவர் மீண்டும் விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து பிரிஜ் பூஷண், வினேஷ் போகத் கில்லாடி பெண். ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் ஹைஜேக் செய்வது எப்படி என்று அவருக்கு தெரியும். அதனால் காங்கிரஸ் அவரை ஹரியானாவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். நான் உங்களிடம் தவறாக நடந்திருந்தால், அப்போதே என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே. காங்கிரஸில் இணைவதற்கு தான் இவ்வளவு நாடகமும் நடத்தினீர்களா என்று மக்கள் கேட்கின்றனர். என் மீதான புகார் தவறு என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications