கமெனி மீது நடதப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட படுகொலை! அமெரிக்க செய்தது சர்வதேச விதிமீறல் - காங்கிரஸ்
டெல்லி: ஈரான் உச்ச தலைவர் கமெனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். இது திட்டமிட்ட படுகொலை என்றும், அமெரிக்கா செய்தது சர்வதேச விதிமீறல் எனவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.
இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், "முறையான போர் அறிவிப்பு இல்லாமல், ஈரானின் உச்ச தலைவர் அலி ஹொசைனி காமேனி படுகொலை செய்யப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது.

காமேனியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள ஷியா சமூகத்தினருக்கும் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை, அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களின் மீதான மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய தாக்குதல்கள் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைக்கு எதிரானது.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைமைத்துவத்தை சீர்குலைக்க வலிமையைப் பயன்படுத்துவது 'ஆட்சி மாற்றும் கோட்பாடுகளின்' ஆபத்தான மீளுருவாக்கம் ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு எதிரானது.
எந்தவொரு வெளிநாடும் மற்றொரு நாட்டின் தலைமையை தீர்மானிக்க முடியாது. இது போன்ற செயல்கள் ஏகாதிபத்தியத்திற்கு சமமானவை" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications