கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக் விவாகரத்து? மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து வாழ்வதாக தகவல்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்- ஆர்த்தி விவாகரத்து பெறப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சுமார் 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், வீரேந்திர சேவாக் - ஆர்த்தி தம்பதி இப்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது சேவாக் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்தவர் வீரேந்திர சேவாக். தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அதிரடியில் எதிரணியினரை தும்சம் செய்வதே இவரது ஸ்டைல்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் என்று பல சாதனைகளை சேவாக் படைத்துள்ளார். இந்தியாவின் மிக சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் சேவாக் இருந்தார்.
சேவாக்- ஆர்த்தி தம்பதி:
இதற்கிடையே சேவாக் தனது 20 வருட மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரியவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்துள்ளனர். மேலும், சேவாக்கின் இன்ஸ்டா போஸ்ட்டில் அவர் ஆர்த்தி உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான போஸ்ட்டில் கூட சேவாக் பகிர்ந்த குடும்ப போட்டோவில் ஆர்த்தி இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இருவரும் கடந்த பல மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சேவாக்கின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
சேவாக்- ஆர்த்தி குடும்பத்தினர்:
வீரேந்தர் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2004ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.. மூத்த மகனான ஆர்யவீர் 2007ம் ஆண்டு பிறந்தார். இளைய மகனான வேதாந்த் 2010ம் ஆண்டில் பிறந்தார். தீபாவளியை முன்னிட்டு ஷேவாக் பகிர்ந்த போட்டோவில் ஆர்த்தியும் அவரது இளைய மகனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தி- சேவாக் தம்பதி 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்துள்ளனர். பிரபலங்களிடையே ஏற்படும் விவாகரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் இப்போது சேவாக்- ஆர்த்தி தம்பதியும் இணைந்துள்ளனர். அதேநேரம் இந்த விவாகரத்து தகவல்கள் தொடர்பாக சேவாக் அல்லது ஆர்த்தி தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
யார் இந்த ஆர்த்தி
டெல்லியைச் சேர்ந்த ஆர்த்தியின் முழு பெயர் ஆர்த்தி அஹ்லாவத்.. 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்த ஆர்த்தி, லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாரதிய வித்யா பவனில் பள்ளிப் படிப்பை முடித்தார். தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தின் மைத்ரேயி கல்லூரியில் கணினி அறிவியலில் டிப்ளமோ படிப்பை படித்துள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications