Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு வேலை தர தயார்! பிரபல இசையமைப்பாளர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கங்கனா ரனாவத்தை சிஐஎஸ்எப் காவலர் அடித்தது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அருக்கு வேலை தரத் தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் விஷால் தத்லானி தெரிவித்துள்ளார்

நடிகை கங்கனா ரனாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி கிளம்ப இருந்தார். அப்போது செக்யூரிட்டி செக் இன் பகுதிக்கு அவர் சென்ற போது சிஎஸ்ஐஎப் காவலர் ஒருவர் அவரை அறைந்துள்ளார்.

Vishal Dadlani offers job to CISF woman who slapped Kangana Ranaut

இதையடுத்து கங்கனா ரனாவத் அங்கிருந்து கிளம்பினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முற்பட்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

விவசாய அமைப்புகள்: ஒரு பக்கம் கங்கனா ரனாவத்தை தாக்கிய சம்பவத்தைப் பலரும் கண்டிக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கங்கனா ரனாவத்தை தாக்கி சிஐஎஸ்எப் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே குல்வீந்தர் கவுருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. அவர் மீது தேவையற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையே இந்த சிஐஎஸ்எப் காவலருக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பாடகர்- இசையமைப்பாளர் விஷால் தத்லானி தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒரு போஸ்டை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வேலை தரத் தயார்: அதாவது குல்விந்தர் கவுர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கு வேலை தர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "நான் எப்போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை.. ஆனால் இந்த காவலரின் கோபத்தை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன். சிஐஎஸ்எப் அமைப்பு அவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால்.. அவருக்கு ஒரு வேலை கிடைப்பதை நான் உறுதி செய்வேன். ஜெய் ஹிந்த். ஜெய் ஜவான். ஜெய் கிசான்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவர் மீது விசாரணையும் நடத்தப்படச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஷால் தத்லானி தனது இன்ஸ்டாகிராம் வேறு சில ஸ்டோரிக்களையும் பகிர்ந்துள்ளார்.

சாடல்: ஒன்றில் "கங்கனாவை ஆதரிப்போருக்கு ஒரு கேள்வி.. உங்கள் அம்மா குறித்து யாராவது தப்பாகப் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டுள்ளார். அதேபோல மற்றொரு போஸ்டில் "நான் மீண்டும் சொல்கிறேன்.. கவுர் பணியில் இருந்து நீக்கப்பட்டால்.. அவருக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதை நான் உறுதி செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத்தை ஏன் தாக்கினேன் என்பது குல்விந்தர் கவுர் விளக்கி இருந்தார். அதாவது, "டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த போது 100 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கங்கனா போராட்டம் நடத்தியதாகப் பேசியிருந்தார். எனது அம்மாவும் அந்த போராட்டத்தில் இருந்தார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதில் 5.37 லட்சம் வாக்குகளைப் பெற்ற கங்கனா ரனாவத், சுமார் 74,755 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+