விளாடிமிர் புதின் இந்தியா வரும்முன்.. ராணுவ தளங்களை பயன்படுத்தும் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இந்த சூழலில், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளாக இருக்கும் இந்தியா மற்றும் ரஷ்யா தொடர்ந்து நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். கடைசியாக 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு புதின் வந்திருந்தார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் புதின் மீண்டும் இந்தியா வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Vladimir putin Narendra modi india

இன்று மாலை டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி வரவேற்று இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் நாளை நடக்கும் 23வது இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் இரு நாட்டின் தலைவர்களும், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே டெல்லிக்கு புதின் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ரஷ்ய நாடாளுமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரெலோஸ் (RELOS) எனப் பெயரிடப்பட்ட ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தொடர்பான ஒப்புதலுக்காக கடந்த வாரமே ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் ரஷ்ட நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.

ரெலோஸ் ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் ராணுவப் படைகளும் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை எந்தவித தடையுமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும். கூட்டுப் பயிற்சிகள், மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் போன்ற சூழல்களில் இந்த அமைப்புமுறை பயன்படுத்தப்படும்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரும் நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை அணுகியுள்ளன. உக்ரைன் உடனான போர் தொடங்கியபின், புதின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை அணுகுமாறு இந்திய அரசுக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாக பல ஐரோப்பிய தூதர்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட பல ஐரோப்பிய தூதர்களால் சூசகமாக தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போரை தங்களின் இருப்புக்கும், ஐரோப்பிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இந்த நாடுகள் கருதுகின்றன. அமெரிக்காவும் ஐரோப்பாவும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனால் புதின் - நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், உக்ரைன் போர் தொடங்கிய 2022 முதல் மோடி - புதின் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடந்துள்ளன. 2022 - 2024 காலகட்டத்தில் 11 முறையும், இந்த ஆண்டில் ஐந்து முறையும் என மொத்தம் 16 முறை இரு நாடுகளின் தலைவர்களும் பேசி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+