வேக்சின் காப்புரிமை.. மனித குல நன்மைக்காக சத்தமின்றி போராடும் இந்தியா.. ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச அளவில் கொரோனா வேக்சின் காப்புரிமையை திறந்து விட வேண்டும் என்றும், எல்லா நாடுகளும் வேக்சினை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா சர்வதேச அரங்கில் குரல் கொடுத்து வருகிறது.

Recommended Video

    Covid-19 Vaccine காப்புரிமையில் தளர்வு வேண்டும்.. India-வின் கோரிக்கைக்கு America ஆதரவு

    கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் இந்தியா.. தற்போது சத்தமே இல்லாமல் இன்னொரு போராட்டத்தை உலக வேக்சின் ஆராய்ச்சி மையங்களுக்கு எதிராக நடத்தி வருகிறது. கடந்த 7 மாதங்களாக இந்தியா மிகப்பெரிய போராட்டத்தை மனித குலத்தை காக்கும் பொருட்டு நடத்தி வருகிறது.

    இந்தியாவின் போராட்டம் குறித்து தெரிந்து கொள்ளும் முன் வேக்சின் அரசியல் குறித்தும், வேக்சின் எப்படி மக்களுக்கு அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.

    வேக்சின்

    வேக்சின்

    பொதுவாக உலகில் ஒரு நோய் தோன்றுகிறது என்றால், பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், பல வருட சோதனைகளுக்கு பின் அந்த நோய்க்கு எதிராக வேக்சின் கண்டுபிடிக்கப்படும். ஒருவேளை மக்களிடையே பரவும் அந்த நோய் ப்ளூ போன்ற மிகப்பெரிய கொள்ளை நோயாக இருந்தால், அந்த வேக்சினின் உரிமம் திறந்து விடப்படும்.

    வேக்சின் உரிமம்

    வேக்சின் உரிமம்

    அதாவது வேக்சினை உருவாக்கிய நாடோ, நிறுவனமோ மட்டுமே அதன் பார்முலாவை வைத்து இருக்காமல், உலக நாடுகள் அனைத்திற்கும் ஓபன் மார்க்கெட்டில் திறந்து விடப்படும். இப்படி செய்வதன் மூலம், உலகம் முழுக்க எளிதாக வேக்சினை கொண்டு செல்ல முடியும். நோய் பரவுவதை உடனே கட்டுப்படுத்த முடியும். பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

    மாறும்

    மாறும்

    இப்படி பெரிதாக பரவும் நோய்களுக்கு எதிராக வேக்சின் உரிமம் திறந்து விடப்பட்டால், உலகில் இருக்கும் நிறுவனங்கள் பல இந்த வேக்சினை உருவாக்கி, அதை மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு விற்கும். இதனால் மக்களும் பயன் அடைவார்கள், நோயும் கட்டுப்படும். அதன்பின் நோய் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பின் வேக்சின் உரிமம் பின் அதே நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கப்படும். பின் அந்த நிறுவனம் வாழ்நாள் முழுக்க அந்த வேக்சினை உருவாக்கலாம்.

    நோய்கள்

    நோய்கள்

    பல நோய்களுக்கு எதிரான மருந்துகள், வேக்சின்கள் இப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல வேக்சின்களின் உரிமத்தை பொதுவில் வெளியிடாமல், அந்த நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்படுத்தி வருவதும் நடந்து வருகிறது. கொரோனா வேக்சினும் அப்படித்தான்.. கொரோனாவிற்கு எதிராக பல நிறுவனங்கள் வேக்சினை உருவாக்கி இருந்தாலும்.. இன்னும் இதன் காப்புரிமம், தொழில்நுட்பம் பொதுவில் வெளியிடப்படவில்லை.

    சிக்கல்

    சிக்கல்

    இதனால் அந்த வேக்சினை உருவாக்கிய நிறுவனங்கள், நாடுகள் மட்டுமே அதனுடைய காப்புரிமையை வைத்துள்ளது. இதனால் அந்தந்த நிறுவனங்கள் மட்டுமே, அவர்களின் வேக்சினை உருவாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது உலகம் முழுக்க வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் வேக்சினை வேறு நாடுகள் உருவாக்க முடியாது.. இதனால் அந்த நிறுவனம் தங்கள் தொழிற்சாலைகளில் வேக்சினை உருவாக்கி அனுப்பும் வரை மற்ற நாடுகள் காத்திருக்க வேண்டும்.

    வேக்சின் உற்பத்தி

    வேக்சின் உற்பத்தி

    குறிப்பிட்ட 10-15 நிறுவனங்கள் மட்டுமே வேக்சின் உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதால் உலகம் முழுக்க வேக்சின் விநியோகம் பரவலாக்கப்படாமல் தடைபட்டு போய் உள்ளது. இங்குதான் இந்தியா உலக நாடுகளுக்காகவும், உலகம் முழுக்க இருக்கும் மக்களுக்காகவும் போராடுகிறது. கொரோனா வேக்சின் காப்புரிமையை திறந்து விட வேண்டும் என்று இந்தியா உலக டிரேட் மையத்தில் கடந்த அக்டோபர் மாதமே கோரிக்கை வைத்தது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்தியாவின் கோரிக்கையின்படி, கொரோனா வேக்சின் பார்முலாவை உலக நாடுகளுக்கு கொடுக்க வேண்டும். உலகம் முழுக்க எந்தெந்த நிறுவனங்கள் விரும்பினாலும், அந்த நிறுவனங்கள் வேக்சினை உருவாக்கட்டும். மக்கள் எல்லோருக்கும் முடிந்த அளவு குறைந்த விலையில், வேகமாக வேக்சின் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளது. அதாவது காப்புரிமையை திறந்துவிட்டு, வேக்சின் விநியோகத்தை பரவலாக்கும் திட்டமாகும் இது!

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்கா

    இந்தியாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவும் இதே கோரிக்கையை வைத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு தற்போது அமெரிக்காவும் ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளது. அதன்படி அமெரிக்க அதிபர் பிடனின் அலுவலகம், இந்த வேக்சின் காப்புரிமையை திறந்து விட வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளது.

    காப்புரிமை

    காப்புரிமை

    காப்புரிமையை காப்பது அவசியம்தான், ஆனால் பெருந்தொற்று சமயங்களில் அதை திறந்து விடுவதே மனித குலத்திற்கு நாம் செய்யும் நன்மை என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது. இந்தியாவின் கோரிக்கையான வேக்சின் காப்புரிமை திறப்பிற்கு அமெரிக்கா தற்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளது. இது கண்டிப்பாக வேக்சின் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும்.

    ஒரு நன்மை

    ஒரு நன்மை

    வேக்சின் உரிமம் திறக்கப்படவில்லை என்றால், பெரிய பிரச்சனைகள் வரும். உதாரணமாக அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள், ஒரு நிறுவனத்திடம் உள்ள மொத்த வேக்சின் கையிருப்பையும் வாங்க முடியும். இதனால் ஆப்ரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் வேக்சின் பாதிக்கும். அதுவே வேக்சின் உற்பத்தியை திறந்து விட்டால், ஆப்ரிக்காவிலேயே ஏதாவது ஒரு நிறுவனம் வேக்சினை உற்பத்தி செய்ய முடியும்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதனால் வேக்சின் எல்லோருக்கும் கிடைக்கும். ஆனால் இந்த காப்புரிமையை கொடுக்க கிட்டத்தட்ட எல்லா வேக்சின் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் இந்த நிறுவனங்கள் காப்புரிமையை பொதுவாக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது... இந்த பெரு நிறுவனங்களுக்கு எதிராகத்தான் தற்போது இந்தியா போராடி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+