Waqf Bill 2025: ராஜ்யசபாவில் நிறைவேறியது வக்பு மசோதா! நள்ளிரவு வாக்கெடுப்பு! 128 ஆதரவு, 95 எதிர்ப்பு
டெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு முடிவில் ராஜ்யசபாவிலும் வக்பு மசோதா நிறைவேறியுள்ளது.
வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலங்களவையில் நேற்று (ஏப்ரல் 3) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்திய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பின்னர் விவாதத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

ராஜ்யசபாவில் வக்பு மசோதா
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சார்ந்த எம்.பிக்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசினர். திமுக சார்பில் திருச்சி சிவா வக்பு வாரிய மசோதாவை கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் பிரிவினைவாத அணுகுமுறையால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் விடும் கண்ணீர் ரத்தமாக மாறி இந்த அரசை அகற்றும் என திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்தார்.
மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. விவாதத்தின் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துப் பேசினார். அப்போது, "வக்ஃப் வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு, ஏன் முஸ்லிம்கள் மட்டுமே அந்த சட்டப்பூர்வ அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டால், அது முஸ்லீம்கள் மட்டுமே இருக்கும் அமைப்பால் எவ்வாறு தீர்க்கப்படும்? சட்டப்பூர்வ அமைப்பு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், அனைத்து மதத்தினரும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்." என்றார்.
நள்ளிரவில் தொடங்கிய வாக்கெடுப்பு
இதையடுத்து, வக்ஃப் (திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் ரிஜிஜு கோரினார். அதைத்தொடர்ந்து தற்போது வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. வாக்கெடுப்பை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நள்ளிரவில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
மின்னணு தானியங்கி வாக்குப் பதிவு முறையைப் பயன்படுத்தி வக்ஃப் மசோதாவில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஒரு உறுப்பினர் தனது வாக்கை மாற்ற விரும்பினால், அது வாக்களிப்புச் சீட்டு மூலம் நடைபெறும். வக்பு சட்டத்தின் ஒரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது.
ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
முடிவில், வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும் எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பாஜகவுக்கு பெரும்பான்மை பலம்
ராஜ்யசபாவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதனால் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பு அதிகம். மாநிலங்களவையில் 98 பாஜக எம்.பிக்கள் உள்பட 123 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். அவையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 என்பதால் பெரும்பான்மைக்கு 119 எம்.பிக்களின் வாக்குகள் போதும். எனவே, இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லோக்சபாவில் நிறைவேறியது
முன்னதாக லோக்சபாவில் வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு 8 மணி நேரம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications