சர்ச்சைக்குள்ளான வக்ஃப் சட்ட திருத்தம்! ஏப்.2ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக திட்டம்
டெல்லி: வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டிருக்கிறது. இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இருப்பினும் திருத்தத்தை ஏப்.2ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த திருத்த சட்டம் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி திருத்த சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

வக்ஃப் சட்டத்திருத்தம்
1955ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. வக்ஃப் என்றால் இறைபணிக்கு கொடுக்கப்படும் நன்கொடை. இந்த நன்கொடை 2 வகைகளாக கொடுக்கப்படுகிறது. ஒன்று அல்லாவின் திருப்பெயரில் கொடுக்கப்படுகிறது. இதனை திரும்ப கேட்கவோ, உரிமை கோரவோ முடியாது.
இரண்டாவது உள்ள நன்கொடையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. இதனை Waqf Alal Aulad என்று கூறுவார்கள். தன்னுடைய சொத்தை ஒருவர் வக்ஃப் சொத்தாக அறிவிக்கலாம். அவரின் வாரிசுகளுக்கு இந்த சொத்தை நிர்வகிக்கும் உரிமை இருக்கிறது.
உரிமை பறிப்பு
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் திருத்தம் முதல் வகை நன்கொடைக்கானது அல்ல. இரண்டாவது வகைக்கானது. இரண்டாவது வகை நன்கொடை இனி அரசு பொறுப்பில் வரும் என்றும், இதனை யாரும் நிர்வகிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சிகள் அச்சம் எழுப்பியுள்ளனர். இதனால் சொத்தின் மீதான உரிமை பறிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், அரசு தரப்போ, நன்கொடைகள் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு கைம்பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகளின் உதவிக்காக பயன்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
கடும் எதிர்ப்பு
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திருத்தத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்த சில கட்சிகளும் கூட விமர்சனங்களை வைத்திருந்தன. எனவே, மசோதா 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதாகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இருப்பினும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாளை மறுநாள், அதாவது ஏப்.2ம் தேதி மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்ப்பும் ஆதரவும்
கேரளாவில் 'கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில்' (KCBC) அமைப்பும், இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாடு (CBCI) அமைப்பும் இந்த திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. "மூன்று ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஒரு பெரிய சட்டப் போராட்டமாக மாறியுள்ளது. இதற்கான நிரந்தர தீர்வு சட்ட திருத்தம் மட்டுமே" என்று இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
மத்திய அரசு திட்டம்
ஆனால் கர்நாடாகவில் இந்த திருத்தத்திற்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. அம்மாநில அமைச்சர் ரஹீம் கான் உள்ளிட்டோர் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். ரம்ஜான் தினமான இன்று பிரார்த்தனைக்கு சென்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் கறுப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஏப்.2ம் லோக்பசாவிலும், ஏப்.3ம் தேதி ராஜ்யசபாவிலும் மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. ஏப்.4ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications