வக்பு வாரிய மசோதா- கூட்டு குழு அறிக்கை தாக்கல்- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
டெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதேபோல லோக்சபாவிலும் வக்பு வாரிய மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
இஸ்லாமியர்கள் தங்களது சமூகத்துக்கு தானமாக கொடுத்த சொத்துகளை நிர்வகிக்கும் அமைப்பு வக்ஃபு வாரியம் (வக்பு வாரியம்). வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்கனவே சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன; ஆனால் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
தற்போதைய வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் உள்ள 50% வக்பு வாரிய சொத்துகள் அரசுடைமையாக்கப்படும் என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதேபோல லோக்சபாவிலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications