பழைய ஓய்வூதிய திட்டம்.. போராடினால் அவ்வளவுதான்.. ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய அரசு ஊழியர்கள் சாதாரண விடுப்பு உட்பட எந்த விடுப்புகளுக்கு விண்ணப்பித்தாலும் அதை ஏற்க வேண்டாம் என்று உத்தரவு
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் எந்த விதமான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும், அதையும் மீறி ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி வரும் கூட்டமைப்பின் பெயரில் தேசிய என்.ஜே.சி.ஏ. எனப்படும் தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் நாடு முழுவதும் மாவட்ட அளவிலான பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பில் மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களுடன் கூடிய சுற்றறிக்கை சென்று இருக்கிறது.

எச்சரிக்கை
அதில் மத்திய அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் சாதாரண விடுப்பு எடுப்பது, தாமதாக பணிக்கு வருவது, உள்ளிருப்பு போராட்டங்கள், பேரணிகள், வேலை நிறுத்தங்கள் உட்பட எந்த வகையான போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்றும், அதை மீறும் ஊழியர்கள் மீது சிசிஎஸ் சட்ட விதி 7இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள்
"வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனுமதிக்கும் விதி சட்டத்தில் இல்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது நடத்தை விதிகளை மீறும் செயல் என பல்வேறு தீர்ப்புகளின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தி இருக்கிறது. இது போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான வேலை நிறுத்தைத்தையும் தடுக்கிறது." என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை கூடாது
அதேபோல் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்கள் நடைபெறும் நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் சாதாரண விடுப்பு உட்பட எந்த விடுப்புகளுக்கு விண்ணப்பித்தாலும் அதை ஏற்க வேண்டாம் என்றும், விருப்பம் இருக்கும் ஊழியர்கள் தடையின்றி அலுவலக வளாகத்துக்குள் நுழைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள், மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறார்கள்.

பாதுகாப்பு பணியாளர்கள்
இதுபோன்ற நோக்கத்துக்காக பாதுகாப்பு பணியாளர்களுடன் இணைந்து செயல்படலாம் என்றும், அமைச்சகத்தால் இதற்கான திட்டங்கள் வகுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ஊழியர்கள் தர்ணா, போராட்டம், வேலை நிறுத்தம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் எத்தனை பேர் ஈடுபட்டார்கள் என்ற விபரத்தை தெரிவிக்கவும் கூறியுள்ளது.

கூட்டு ஆலோசனை அமைப்பு
மத்திய அரசு பணியாளர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்பு ஏற்கனவே இயங்கி வருகிறது. மத்திய அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வழங்கும் அரசுக்கும், ஊழியர்கள் அமைப்புக்கும் இடையே பொதுவான விசயங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுடன் பொதுப் பணிகளில் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறது.

ஊழியர்களின் பிரச்சனைகள்
ஜேசிஎம் எனப்படும் இந்த மத்திய அரசு பணியாளர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்பு பணியாளர்களின் முழு ஒத்துழைப்புடனேயே செயல்பட்டும் வருகிறது. அதன் முன் கொண்டு செல்லப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து அது தீவிரமாக விவாதித்து தீர்வு காண முயற்சித்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications