அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்களால் தேசத்தை காக்க முடியாது.. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
டெல்லி: அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்களால் தேசத்தை காக்க முடியாது. அரசியல் சாசனத்தை நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆக்க வேண்டும், என்று பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
71வது இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு வருடம் நவம்பர் 26ம் தேதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வாசித்து விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
டாக்டர் அம்பேத்கார் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய ஒருமைப்பாட்டை கொண்டாடும் வகையிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

பிரதமர் மோடி
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தனது உரையில், அரசியல் சாசனத்தை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சாசனத்தை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும். அம்பேத்கரின் பெயரை நாம் காப்பாற்ற வேண்டும். அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்களால் எப்படி தேசத்தை காக்க முடியும். அரசியல் சாசனத்தை நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆக்க வேண்டும்.

ஜனநாயகம்
ஜனநாயகத்தை மதிக்கும் கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும். குமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவில் குடும்ப அரசியல்தான் இருக்கிறது. குடும்ப அரசியலுக்கு நாடு முழுக்க மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மும்பை தாக்குதல்
இன்று 26/11 மும்பை தாக்குதல் நடைபெற்ற நாள் என்பதையும் நாம் மறக்க கூடாது. தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த எல்லோரையும் நான் வணங்குகிறேன். நாட்டிற்காக தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டவர்களை இங்கே நினைவு கூறுகிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு நாளும் தீரத்துடன் போராடும் ராணுவ வீரர்களை மதிக்க வேண்டும்.

உரிமைகள்
உரிமைகளை பாதுகாக்க நாம் எப்போது குரல் கொடுக்க வேண்டும். நம்முடைய உரிமைகளை பாதுகாக்க நாம் எப்போதும் முன்னோக்கி செல்ல வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தை மதித்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அதை பின்பற்றி நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications