காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திட்டோம்.. அந்த நாளிலிருந்து விடியல் - அமித்ஷா பெருமிதம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் செனொவாரில் உள்ள சூரிய கோயிலில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்ட வைனவ சாமியார் ராமானுஜரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
அதன் பின்னர் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிறுவியுள்ளது.

சிறப்பு சட்டம் நீக்கம்
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எந்தவிதமாக ஏற்றத்தாழ்வும் இன்றி காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆளுநர் சின்ஹா வளர்ச்சியை வழங்கி வருகிறார். "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார சட்டம் 370 மற்றும் 35 A வை நீக்குவதன் மூலமாக அது முழுமையாக தேசத்தோடு ஒருங்கிணைக்கப்படும் என்று நாட்டு மக்கள் நம்பி வந்தனர்.

புதிய சகாப்தம்
பிரதமர் நரேந்திர மோடி அதை செய்து காட்டினார். சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி ஒரு புதிய சகாப்தம் காஷ்மீரில் விடிந்திருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள சூர்ய கோயில் மீட்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டதால் திருப்தி அடைகிறேன். ராமானுஜரின் அமைதி சிலையை ஸ்ரீநகரில் உள்ள இந்த கோயிலில் திறந்து வைப்பது இந்திய மக்களுக்கு, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நல்ல அறிகுறியாக இருக்கும்.

ராமானுஜர் சிலை
இந்த சிலை ராமானுஜரின் போதனைகளை காஷ்மீரில் உள்ள அனைத்து மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் வழங்கி அமைதி மற்றும் வளர்ச்சியின்பாதையில் கொண்டு செல்லும். ராமானுஜர் அவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் தனது பணிகளை செய்து வந்தாலும் காஷ்மீருக்கு போதயனா விருதியை வாங்குவதற்காக வந்தார். காஷ்மீர் மன்னர் தனது நூலகத்தின் வாயில்களை மட்டும் திறக்காமல் சுவாமி ராமானுஜரையும் வரவேற்று இருக்கிறார்.

ராமானுஜர் சிலைகள்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் அவரது சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமித்ஷா காஷ்மீர் சூர்ய கோயில் திறந்து வைத்தது ராமானுஜரின் 11 வது சிலையாகும். 4 அடி உயரம் கொண்ட இந்த சிலை 600 கிலோ எடை கொண்டதாகும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications