நாங்க தோற்கவில்லை..பிற கட்சிதான் வென்றுவிட்டது..நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்து ப சிதம்பரம் ட்விட்
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை.. டாலரின் மதிப்பு தான் உயர்ந்து விட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறுவது, நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை ஆனால், பிற கட்சி தேர்தலில் வென்று விட்டது என்று கூறுவது போல் உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறியுள்ளார்.
சமீப காலமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சித்து வருகின்றன.

ரூபாய் மதிப்பு நன்றாகவே இருந்து வருகிறது
இந்த நிலையில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் மாநாட்டில் பங்கேற்பதற்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-பிற வளரும் நாடுகளின் நாணய மதிப்பை விட ரூபாய் மதிப்பு நன்றாகவே இருந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக நான் இதை பார்க்கவில்லை.

டாலர் வலுப்பெறுவதாகவே..
டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவே இதை பார்க்கிறேன். ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியது. இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பதில் சந்தை நடவடிக்கைகளில் தலையிடவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான பல்வேறு நாட்டு பணத்தின் மதிப்பும் அண்மைக்காலமாக கணிசமாக சரிந்துள்ளது. டாலர் வலுப்பெறுவதாகவே இதை பார்க்க முடியும். ரூபாய் மதிப்பு சரிவதாக இதை கருத முடியாது. பல நாட்டு பணத்தை விட இந்திய ரூபாயின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கிறது'' இவ்வாறு அவர் கூறினார்.

ப சிதம்பரம் ட்விட்
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் இன்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரமும் 'நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை ஆனால், பிற கட்சி தேர்தலில் வென்று விட்டது என கூறுவது போல் இருக்கிறது என நிர்மலா சீதாராமன் பேச்சை விமர்சித்து ட்விட் வெளியிட்டுள்ளார். ப சிதம்பரம் வெளியிட்ட ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் தோற்கவில்லை..
'ரூபாய் மதிப்பு குறையவில்லை.. ஆனால் டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது என்று நிதி அமைச்சர் சொல்கிறார். இது முற்றிலும் உண்மை! தேர்தலில் தோற்ற கட்சியோ.. அல்லது வேட்பாளாரே.. எப்போதும் சொல்வது இதுதான். நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை ஆனால், பிற கட்சி தேர்தலில் வென்று விட்டது.. இவ்வாறு சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும். எம்.பியுமான ராகுல் காந்தியும் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சை வைத்து, உலக பட்டினிக்குறியீட்டில் இந்தியா பின்னடைவை சந்தித்து தொடர்பாக விமர்சித்து டிவிட் வெளியிட்டு இருந்தார். அதில், 'உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இடம் பெற்றுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் பட்டினி அதிகரிக்கவில்லை. மாறாக, பிற நாடுகளில் மக்கள் பசி எடுப்பதாக மக்கள் உணர்வதில்லை என்று பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் சொல்லப்போகிறார்கள்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications