இவிஎம் வேண்டாம்.. வாக்குச்சீட்டை கொண்டு வாங்க.. நாடு முழுதும் காங்கிரஸ் பிரசாரம் - கார்கே அறிவிப்பு
டெல்லி: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அது தேவை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்" என்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது. பாஜக தலைமையிலான ‛மகாயுதி' கூட்டணியில் பாஜக மட்டும் தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தம் 233 தொகுதிகளை கைப்பற்றியது.

அதேவேளையில் ‛மகா விகாஸ் அகாடி' பெயரில் கூட்டணி அமைத்து இருந்த காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணி வெறும் 46 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இந்த தோல்வியை தொடர்ந்து வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். இதற்காக காங்கிரஸ் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது'' என்று பரபரப்பாக அறிவித்துள்ளார்.
இன்று நம் நாட்டின் அரசியலமைப்பு தின நாளையொட்டி டெல்லியில் ‛அரசியலமைப்பு பாதுகாப்பு பிரசாரம்' என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் பற்றி நான் பேச விரும்பவில்லை.
ஆனால் ஏழை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் வீணாகிப் போகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இதனால் வாக்குச்சீட்டு முறைக்கு நாம் மாற வேண்டுமு். அவர்களே (பாஜக) மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து கொள்ளட்டும். நமக்கு இனி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம். வாக்குச்சீட்டு முறை தான் வேண்டும். அப்போது தான் அவர்களின் உண்மையான நிலை என்பது தெரியும்.
நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தி தலைமையில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை போல் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதுபற்றி மற்ற கட்சியினரிடம் பேச உள்ளோம் ’’ என்று தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications