அதிகாரம் இருக்கு! நேரடியாக மேட்டருக்கு வந்த அமித்ஷா! நேரு பாயிண்டை வைத்தே எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் குறித்த மாதோசா குறித்த விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வந்தது.

இதற்கிடையே இன்றைய தினம் லோக்சபாவில் அவை நடவடிக்கை ஓரளவுக்கு நடந்தது. அப்போது டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் மசோதா குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிகாரம் இருக்கு: மத்திய அரசின் இந்த புதிய மசோதாவை ஆதரித்துப் பேசிய அமைச்சர் அமித் ஷா, புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியக் கூட்டணி பற்றி யோசிக்கும் முன்பு எதிர்க்கட்சிகள் தலைநகர் டெல்லியைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்ற தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, "இந்த அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கிறது. தேசிய தலைநகர் பகுதியான டெல்லியில் எந்தவொரு பிரச்சினையிலும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கு இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் கூறுகிறது.
"இந்தியா": டெல்லிக்கான சட்டங்களைக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. நமது அரசியலமைப்பு விதிகளில் இது தெளிவாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும் டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் என்ன தான் கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடி தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்" என்றார்.
தொடர்ந்து டெல்லியில் இப்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாக விமர்சித்த அவர், "கடந்த 2015ஆம் ஆண்டில் டெல்லியில் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. அவர்களுக்கு எதற்கு எடுத்தாலும் போராடுவதை மட்டுமே நோக்கம். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் இல்லை. எந்த அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் இல்லை. இங்கு நடக்கும் ஊழல்களை மறைக்க விஜிலென்ஸ் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதை இவர்களின் நோக்கம்.
நேரு பாயிண்ட்: 2015ஆம் ஆண்டு இவர்கள் ஆட்சிக்கு வரும் வரை டெல்லி பல்வேறு அரசுகளின் கீழ் இருந்துள்ளது. அப்போதெல்லாம் டெல்லி நிர்வாகம் சுமுகமாகவே செயல்பட்டது. ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்களும் கூட டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரும் யோசனைக்கு எதிராகவே இருந்தனர் என்பதையும் நான் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்" என்று அவர் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் குடியுரிமை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்த மசோதா மத்திய அரசுக்கு அளிக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்பதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இருப்பினும், லோக்சபாவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறும். ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் இது நிறைவேறும் சூழல் உருவாகி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications