எனக்கு எந்த விதமான அரசியல் சார்பும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முப்படை தளபதி பிபின் ராவத் விளக்கம்!
எனக்கு எந்த விதமான அரசியல் தொடர்பும் இல்லை, எனக்கும் அரசியலுக்கும் அதிக தூரம் உள்ளது என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: எனக்கு எந்த விதமான அரசியல் தொடர்பும் இல்லை, எனக்கும் அரசியலுக்கும் அதிக தூரம் உள்ளது என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
குடி உரிமை சட்ட திருத்த போராட்டம் குறித்து இந்திய முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்தார். அதில், இந்த போராட்டத்தில் வன்முறை நடக்கிறது. மக்களை தவறான திசைக்கு கொண்டு செல்லும் நபர்கள் தலைவர்கள் கிடையாது. மக்களை வன்முறையை நோக்கி நகர்த்தி செல்வது தலைவர்களுக்கு உகந்தது கிடையாது என்று பிபின் ராவத் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பிபின் ராவத் தற்போது முப்படைகளின் தளபதியாக பதவி ஏற்றுள்ளார். ராணுவ தளபதி பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, முப்படைகளின் தளபதியாக அவர் நேற்று பதவி ஏற்றார். இவர்தான் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஆவார்.

என்ன டெல்லி
இவரின் அலுவலகம் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரியாதை செலுத்தினார். அதன்பின், டெல்லியில் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூன்று படைகளை சேர்ந்த தளபதிகள் அவர் உடன் இருந்தனர்.

என்ன பேட்டி
இந்த நிலையில் பிபின் ராவத் குடியுரிமை சட்ட போராட்டம் குறித்து தான் அளித்த பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், நாங்கள் அரசியலை விட்டு தூரமாக இருக்கிறோம். எனக்கு அரசியல் சார்பு எதுவும் கிடையாது. நான் அரசியல் சார்ந்து இதுவரை செயல்பட்டதும் கிடையாது.

அரசு எப்படி
நாங்கள் அரசுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம். அதுதான் எங்கள் பணி. ஆளும் அரசு சொல்வதை செய்வோம். கட்சி ரீதியாக செயல்பட மாட்டோம். முப்படைகளையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முப்படை வேண்டும்
முப்படைகளும் இனி ஒன்றாக செயல்படும். இந்தியாவின் பாதுகாப்பை இது உறுதிப்படுத்தும். இந்தியாவின் எல்லை பாதுகாப்பிற்கும், ராணுவ நவீனமயமாக்கத்திற்கும் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன், என்று பிபின் ராவத் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications