மம்தாவுடன் ரகசிய உடன்பாடா? தெளிவுபடுத்துங்க . . மோடியிடம் விளக்கம் கேட்கும் பாஜக முன்னாள் தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் சந்தித்து பேசிய நிலையில், மம்தாவுடன் ரகசிய உடன்பாடா ஏதும் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்துமாறு பிரதமர் மோடிக்கு பாஜக முன்னாள் தலைவர் கேள்வி கேட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மம்தா பானர்ஜி.

பாஜக அரசுக்கு எதிராக 3 ஆம் அணியை உருவாக்கும் முயற்சியில் ஒருபக்கம் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

 துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி தேர்தல்

எனினும், ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்திய திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஜெகதீப் தங்கரை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை நிறுத்தும் விவகாரத்தில் தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை எனக்கூறிய மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக கூறி எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.

 நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம்

நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம்

மம்தா பானர்ஜியின் இந்த முடிவு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக அரசியல் விமர்சர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். மத்தியில் ஆளும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மம்தா பானர்ஜி, நேற்று 4 நாட்கள் பயணமாக டெல்லி வந்தார். டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் மம்தா பானர்ஜி, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவார் என்று தெரிகிறது.

 பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்

பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்

ஒருபுறம் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் அதே நாளில், பிரதமர் மோடியை மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசுவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுக்காமல் இல்லை. இந்த சூழலில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உடன் எந்த உடன்பாடும் இல்லை என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று மேகாலய மாநிலத்தின் முன்னாள் கவர்னரும், மேற்கு வங்காள மாநில முன்னாள் பாஜக தலைவருமான ததாகத்தா ராய் தெரிவித்துள்ளார்.

 தப்பி விடுவார்களோ? என்ற அச்சம்

தப்பி விடுவார்களோ? என்ற அச்சம்

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ததாகத்தா ராய், "பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி இடையே ஏற்படக்கூடிய உடன்பாடு காரணமாக சில திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில திருடர்களும், கொலைகாரர்களும் தப்பி விடுவார்களோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அத்தகைய உடன்பாடு எதுவும் உங்களுக்குள் ஏற்படவில்லை என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்" எனப்பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+