மமதா இன்று டெல்லி வருகை-மோடி, அமித்ஷா, சோனியாவுடன் சந்திப்பு-வருண்காந்தி திரிணாமுல் காங்.க்கு தாவல்?
டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங். தலைவருமான மமதா பானர்ஜி இன்று மாலை டெல்லி வருகை தருகிறார். டெல்லியில் வரும் 25-ந் தேதி வரை தங்கி இருக்கும் மமதா பானர்ஜி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திக்கிறார். டெல்லியில் முகாமிடும் மமதா பானர்ஜியை பாஜக எம்.பி. வருண் காந்தி சந்தித்து திரிணாமுல் காங்கிரஸில் இணையக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல்- மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வென்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்த மமதா பானர்ஜி டெல்லியில் 2-வது முறையாக முகாமிடுகிறார். கடந்த ஜூலை மாதம் டெல்லியில் தங்கி இருந்த மமதா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் ஆகியோருடன் மமதா ஆலோசனை நடத்தி இருந்தார்.

கோவாவில் மமதா பயணம்
இதன்பின்னர் அண்மையில் கோவா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் மமதா பானர்ஜி. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு கோவா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான வியூகங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் விவாதித்திருந்தார்.

நவ.25 வரை டெல்லியில் மமதா முகாம்
இந்நிலையில் இன்று மாலை டெல்லி வருகிறார் மமதா பானர்ஜி. பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேச நேரம் கேட்டிருக்கிறார். ஆனாலும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு உறுதியாகவில்லை. அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து மேற்கு வங்க மாநிலத்துக்கான நிதி உதவி தொடர்பான கோரிக்கைகளை மமதா பானர்ஜி முன்வைக்க உள்ளார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து மீண்டும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வரும் நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் மமதா சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கலகக் குரல் வருண் காந்தி
இதனிடையே டெல்லியில் முகாமிடும் மமதா பானர்ஜியை பாஜக எம்.பி.யான வருண் காந்தி சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் வருண் காந்தி. சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையில் மேலும் 4 கோரிக்கைகளை வருண் காந்தி முன்வைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு வருண் காந்தி எழுதிய கடிதத்தில், விவசாய சட்டங்களை முன்னரே ரத்து செய்திருந்தால் 700 விவசாயிகள் உயிருடன் இருந்திருப்பார்களே.. அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் வருண் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். முன்னதாக பாஜகவின் தேசிய நிர்வாகக் குழுவில் இருந்து வருண் காந்தி, அவரது தாயார் மேனகா காந்தி ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.

திரிணாமுல் காங்கிரஸில் இணையும் வருண் காந்தி?
இந்நிலையில்தான் டெல்லியில் மமதாவை வருண் காந்தி சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது. அத்துடன் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் வருண் காந்தி இணையலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி வருகின்றனர். பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோவும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications