பாஜக vs மம்தா பானர்ஜி.. மேற்கு வங்கத்தில் கொடி நாட்டப்போவது யார்? வாக்குப்பதிவு நிறைவு
டெல்லி: மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக ஏப்.29ல் தேர்தல் நடைபெறும். 152 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது நிறைவடைந்திருக்கிறது.
இன்று தேர்தல் நடக்கும் 152 தொகுதிகளை பொறுத்தவரை, மேற்கு வங்கத்தின் 16 மாவட்டங்களில் இந்தப் பாதித் தொகுதிகள் பரவியுள்ளன. இதில் 8 மாவட்டங்கள் வட வங்காளத்திலும், 8 மாவட்டங்கள் தென் வங்காளத்திலும் உள்ளன. சுமார் 3.6 கோடி வாக்காளர்கள், 1,478 வேட்பாளர்களின் தலையெழுத்தை இன்று தீர்மானிக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் இதுவரை இல்லாத அளவாக 2,407 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படைகளை (CAPF) இந்தப் முதற்கட்ட தேர்தலுக்காக மட்டும் குவித்துள்ளது. வன்முறையற்ற, அமைதியான தேர்தலை உறுதி செய்வதற்காக இந்தப் பாதுகாப்புப் படை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி, முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளின் லிஸ்ட்டில் இல்லை. ஆனால் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மம்தா பானர்ஜியின் கௌரவப் பிரச்சனையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில் இம்முறை கடும் போட்டி நிலவுகிறது.
இது தவிர, வட வங்காளத்தின் மிக முக்கியமான தொகுதியான தின்காடாவிலும், எல்லைப் பகுதியான ராய்கஞ்சிலும், வட வங்காளத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் சிலிகுரியிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணி நிரவரப்படி, சுமார் 60 லட்சம் வாக்களர்கள் வாக்களித்திருந்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் 18.76% ஆக இருந்தது. தற்போது மாலை 6 மணி நிலவரப்படி, 91.58% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது கடந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக பதிவான வாக்குகளின் சதவிகிதத்தை விட அதிகம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications