மம்தாவுக்கு அதிர்ச்சி தோல்வி.. மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக! Matrize எக்சிட் போல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இப்போது Matrize நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அது மேற்கு வங்க பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுக்கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படுவதாக அந்த எக்சிட் போல் முடிவுகள் கூறியுள்ளன.
இந்தியாவே உற்றுநோக்கிய மேற்கு வங்கத் தேர்தல் போர்க்களம் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்குப் பிரம்மாண்டமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்தச் சூழலில் வெளியாகியுள்ள Matrize கணிப்புகள், மேற்கு வங்கத்தில் ஒரு மிக பெரிய அரசியல் மாற்றம் காத்திருப்பதாக கூறியுள்ளது.

மொத்தம் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்கச் சட்டசபையில், ஆட்சியைப் பிடிக்க 148 இடங்கள் தேவை.
இதில் Matrize கணிப்பின்படி, பாஜக 146 முதல் 161 இடங்கள் வரை பிடித்துப் பெரும்பான்மையைத் தொடும் எனக் கூறப்படுகிறது. அக்கட்சியின் வாக்கு வங்கி 42.5 சதவீதமாக உயரும் எனத் தெரிகிறது.
மறுபுறம் கடந்த 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருக்கும் , மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் 125 முதல் 140 இடங்களை மட்டுமே பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்கு சதவீதம் 40.8-ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
இந்தக் கணிப்பு உண்மையானால், 2011 முதல் வங்காளத்தை ஆண்டு வரும் 'தீதி' மம்தா பானர்ஜியின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும். இது சமீபத்திய இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியாகக் கருதப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications