Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நித்தியானந்தாவின் கைலாசாவை விடுங்க.. அமெரிக்காவை அலறவிட்ட ரஜ்னீஷ் தெரியுமா! மைக்ரோ நேஷன்கள் லிஸ்ட்

உலகெங்கும் கைலாசா போல பல மைக்ரோ நேஷன்கள் இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நித்தியானந்தாவின் கைலாசா மைக்ரோ நேஷன் என்று அழைக்கப்படும். உலக நாடுகள் மற்றும் ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத, அதேநேரம் தங்களை சுதந்திர நாடாகக் கூறிக் கொள்ளும் பகுதிகளே மைக்ரோ நேஷன் என்று அழைக்கப்படும். இதுபோல உலகெங்கும் இருக்கும் மைக்ரோ நேஷன்களை பார்க்கலாம்.

இந்தியாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்தியானந்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்த அவர், அவ்வப்போது தொடர்ச்சியாக ஆன்மீக வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில், நித்தியானந்தா புதிதாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இது இந்துக்களுக்கான ஒரு தேசமாக இருக்கும் என்றும் கூறினார்.

 நித்தியானந்தா

நித்தியானந்தா

ஈகுவடார் அருகே ஒரு தீவை நித்தியானந்தா வாங்கியுள்ளதாகவும் இதையே நித்தியானந்தா கைலாசாவாக மாற்றுவதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், இதை உறுதி செய்ய முடியவில்லை.. அதேநேரம் அறிவிப்புடன் நிற்காமல் கைலாசாவுக்கு தனியாக நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம், வெளியுறவுத்துறை உள்ளிட்டவற்றை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் திபெத்தில் உள்ள கைலாச மலையின் பெயரை நித்தியானந்தா தனது இடத்திற்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் அனைவரும் இங்கே வந்து இந்து கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம் என்று அவர் அறிவித்தார்.

கைலாசா

கைலாசா

இதனிடையே கடந்த மாதம் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஐநா மாநாட்டில் கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் கலந்து கொண்டு இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்று சொல்லி அதன் பிரதிநிதியாகப் பெண் ஒருவர் மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது அவர், நித்தியானந்தா அவரது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுவதாகவும் கைலாசா இதுவரை 150 நாடுகளில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளது என்றும் கூறியிருந்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

 மைக்ரோ நேஷன்

மைக்ரோ நேஷன்

நித்தியானந்தா ஆதரவாளர்கள் கைலாசா தனி நாடு என்று சொல்லிக் கொண்டாலும் கூட மற்ற நாடுகளோ, ஐநா சபையோ கைலாசாவை தனி நாடாக அறிவிக்கவில்லை. இதுபோல சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத பகுதிகள் மைக்ரோ நேஷன் என்று அழைக்கப்படும். உலக நாடுகள் மற்றும் ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத, அதேநேரம் தங்களை சுதந்திர நாடாகக் கூறிக் கொள்ளும் பகுதிகளே மைக்ரோ நேஷன் என்று அழைக்கப்படும். பொதுவாக அரசியல் எதிர்ப்பு, போராட்டத்தின் ஒரு பகுதி உள்ளிட்டவற்றால் இந்த மைக்ரோ நேஷன்கள் உருவாக்கப்படும், இதில் பல பகுதிகளுக்குச் சொந்தமாக நாணயம், அரசியலமைப்பு மற்றும் ராணுவங்களைக் கூட இருக்கிறது.

 லிபர்லேண்ட்

லிபர்லேண்ட்

உலகளவில் சுமார் 80க்கும் மைக்ரோ நேஷன்கள் உள்ளன. அதில் சுவாரசியமான சிலவற்றைப் பார்க்கலாம். லிபர்லேண்ட் என்ற இந்த மைக்ரோ நேஷன் 2015இல் செக் அரசியல்வாதி விட் ஜெட்லிகாவால் நிறுவப்பட்டது. கைலாசாவைப் போலவே, லிபர்லாண்டிற்கும் தனி இணையதளம் உள்ளது.. அது குரோஷியா மற்றும் செர்பியா இடையே அமைந்துள்ளது. லிபர்லாந்திற்கு இரண்டு துணை அதிபர்கள் மற்றும் ஐந்து அமைச்சர்கள் உள்ளனர். மேலும் அங்கு அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் உள்ளதாகவும் அவர்களின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சீலண்ட்

சீலண்ட்

சீலண்ட் என்ற இந்த பகுதி 1967இல் ராணுவ கோட்டையில் நிறுவப்பட்டது.. இது இங்கிலாந்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரஃப்ஸ் டவர் என்று அழைக்கப்படும் கோட்டை, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.. ஆனால் போர் முடிந்த சில ஆண்டுகளில் இது கைவிடப்பட்டது. அதன் பிறகு ராய் பேட்ஸ் என்பவர் இங்குத் தனது வானொலி நிலையத்தை அமைத்தார். பின்னர் அவர் இந்த கோட்டைத் தீவை "சீலண்ட்" என்ற சுதந்திர நாடாக அறிவித்தார், அப்போது யாருமே வசிக்காத இந்த நிலத்திற்கு அவர் உரிமை கோரினார். இப்போது அதன் மக்கள் தொகை 70ஆக உள்ளதாகக் கூறப்படுகிறது.

 ஸ்னேக் ஹில் மாகாணம்

ஸ்னேக் ஹில் மாகாணம்

2003இல் சில ஆஸ்திரேலியா மக்கள் அந்நாட்டில் வரி செலுத்த முடியாமல் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். ஆஸ்திரேலியா அரசு மோசமான சட்டத்தால் அவர்களின் அனைத்து பணத்தையும் பறிப்பதாகச் சாடினர். இதையடுத்து அவர்கள் ஸ்னேக் ஹில் மாகாணம் என்ற தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தனர். இப்போது அங்கு சில நூறு பேர் வசிக்கிறார்கள். ஒரு சிறு தீவை அவர்கள் சொந்த நாடாகச் சொல்கிறார்கள். இளவரசி ஹெலினா ஸ்னேக் ஹில்லின் தலைவர் உள்ளார். தனது கணவர் இளவரசர் பால் உயிரிழப்பிற்குப் பிறகு அவர் தலைவரானார்.

 எல்லோர் கிங்டம்

எல்லோர் கிங்டம்

டென்மார்க் தீவான ஜிலாந்தில் ரோஸ்கில்டிற்கு வடக்கே உள்ள எல்லோர் தீவில் இந்த மைக்ரோ நேஷன் அமைந்துள்ளது. எல் வடிவில் கிழக்கு-மேற்கில் 300 மீ மற்றும் வடக்கு-தெற்கு திசையில் 200 மீ தொலைவிற்கு இது அமைந்துள்ளது. இது 1944 முதல் தன்னை தானே சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.

 ரஜ்னீஷ்புரம்:

ரஜ்னீஷ்புரம்:

வடமேற்கு அமெரிக்காவில் ஓரிகானின் வாஸ்கோ கவுண்டியில் அமைந்துள்ள இந்த மைக்ரோ நேஷனை இந்திய ஆன்மீக குரு ரஜ்னீஷ் நிறுவினார். இந்துக்களுக்கான நாடாக இது இருக்கும் என்று அவர் அறிவித்திருந்தார். ரஜ்னீஷ்புரத்திற்கு சொந்தமாக போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் பொது போக்குவரத்து அமைப்பு இருந்தது. இங்குத் தனியாக ஏர்போர்ட் எல்லாம் கூட ஏற்படுத்தப்பட்டது. 1981 மற்றும் 1988 வரை இது மைக்ரோ நேஷனாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+