Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை மேல காசு.. ரிஸ்க் துளியும் இல்லை.. அள்ளி தரும் அட்டகாசமான 8 தபால் நிலை சேமிப்பு திட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தபால் நிலையங்களில் கை நிறைய லாபம் தரும் 8 முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து நாம் பார்க்கலாம். இதில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இப்போதெல்லாம் எதில் நல்ல லாபத்துடன் பத்திரமாக முதலீடு செய்யலாம் என்பதைக் கண்டறிவதே சிரமமாக இருக்கிறது. ஆனால், அந்த கவலை இனியும் வேண்டாம். தபால் நிலையங்களில் நல்ல வட்டியுடன் நமக்கு இருக்கும் முதலீடுகள் குறித்து பார்க்கலாம்.

தேசிய சேமிப்பு பத்திரம்: இத்திட்டத்தில் நமக்கு 7.7% வட்டி கிடைக்கும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதிலும் குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய். அதிகபட்ச வரம்பு இல்லை. கணக்குதாரர் உயிரிழப்பு உள்ளிட்ட சில காரணங்களால் மட்டும் முன்கூட்டியே தொகையை எடுக்கலாம். இதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் 1.44 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 80சி கீழ் விலக்கு கிடைக்கும் என்பது மற்றொரு சிறப்பாகும்

கிசான் விகாஸ் பத்திரம்: நீண்டகால முதலீட்டை ஊக்குவிக்கக் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் மூலம், ரிஸ்க் இல்லாமல் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 115 மாதங்கள்.. அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்கள். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு இல்லை. இதில் நமக்கு 7.5% கூட்டு வட்டி கிடைக்கும். இதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் இரண்டு லட்சம் கிடைக்கும். இரண்டு லட்சம் முதலீடு செய்தால் 4 லட்சம் கிடைக்கும். அதேநேரம் இதில் வரி விலக்கு எதுவும் நமக்குக் கிடைக்காது.

 What are the 8 major saving scheme that are available in Post office

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: பெயரில் இருப்பதைப் போலவே இது 60 வயதைக் கடந்தவர்களுக்கான சேமிப்பு திட்டம். அதேநேரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 55 வயதிலும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி 50 வயதுக்கு பிறகும் முதலீடு செய்யலாம். மற்ற திட்டங்களுடன் ஒப்பீடும் போது அதில் தான் அதிகபட்ச வட்டி 8.2% கிடைக்கும். ரூ,1000 முதல் 30 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். காலாண்டிற்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். இதன் மொத்த முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள். முதல் ஆண்டில் வெளியேறினால் வட்டி கிடைக்காது.

அதேநேரம் 1- 2 ஆண்டுகளில் வெளியேறினால் 1.5% தொகையும் அதன் பிறகு வெளியேறினால் 1% தொகையும் பிடித்தம் செய்யப்படும். இதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 1,41,000 ரூபாய் கிடைக்கும். அதிகபட்ச தொகையான 30 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டில் 42.30 லட்சம் கிடைக்கும். இதில் ரூ.50,000 அதிகமாக வட்டி கிடைத்தால் மட்டும் வரி பிடித்தம் செய்யப்படும். அதிலும் 15G/15H மூலம் வரி பிடித்ததைத் தவிர்க்கலாம்.

 What are the 8 major saving scheme that are available in Post office

தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான திட்டம்: அடுத்து தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான கணக்கு திட்டம். இது மாதாமாதம் வட்டி தரக் கூடியது. இதில் தனிப்பட்ட கணக்கு என்றால் ஒருவர் அதிகபட்சம் 9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கு என்றால் 15 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம், 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டிய இத்திட்டத்தில் நமக்கு 7.4% வட்டி கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் இருக்கும் இத்திட்டத்தில் முதலாம் ஆண்டு லாகின் பீரியட். அதாவது உங்களால் பணத்தை எடுக்கவே முடியாது.

அதன் பிறகு பணத்தை எடுக்கலாம், மூன்று ஆண்டுகளில் எடுத்தால் 2% பிடிப்பார்கள். அதன் பிறகு பணத்தை எடுத்தால் 1% பிடித்தம் செய்வார்கள். நமக்கு வரும் வட்டியை விட பிடித்தம் செய்யப்படும் தொகை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ. 37,000 வட்டி கிடைக்கும். 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5.5 லட்சம் கிடைக்கும். இதில் வரிவிலக்கு எதுவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேசிய சேமிப்பு கால வைப்பு: முதலில் தேசிய சேமிப்பு கால டெபாசிட். இவை வங்கிகளில் உள்ள ஃபிக்ஸ்ட் டெபாசிட் போலத் தான்.. அதைத்தான் போஸ்ட் ஆபீஸ்களில் Time Deposit என்கிறார்கள். இதில் நாம் குறைந்தது ஓராண்டு முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஓராண்டிற்கு 6.9% சதவீத வட்டி கிடைக்கும் நிலையில், அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு 7.5% சதவீத வட்டி கிடைத்துள்ளது.

இதில் ஆண்டு முடிவில் வட்டி வரவு வைக்கப்படும். 5 ஆண்டு முதலீடு செய்தால் 80சி கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இதில் நீங்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து ரூ, 1,37,500 கிடைக்கும். எந்தவொரு வங்கியிலும் இந்தளவுக்கு வட்டி கிடைக்காது என்பதை மறக்காதீர்கள்.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்: இது பெண்களுக்கான திட்டம். இரண்டு ஆண்டுகள் இருக்கும் இத்திட்டத்தில் 7.5% வட்டி வழங்கப்படும், இவ்வளவு குறுகிய காலத்திற்கு வேறு எங்கும் இந்தளவுக்கு வட்டி கிடைக்காது. ரூ.1000 முதல் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒரு லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளில் 1,16,022 ரூபாய் கிடைக்கும். இரண்டு லட்சம் முதலீடு செய்தால் ரூ.2.32 லட்சம் கிடைக்கும். இதில் வரிவிலக்கு எதுவும் கிடைக்காது.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: இது பெண் குழந்தைகளுக்கான திட்டம். இதில் இணைய உங்கள் பெண் குழந்தை 10 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.. இதில் நீங்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.250, அதிகபட்சம் 1.5 லட்சம் வரை செலுத்தலாம். இதிலும் வட்டி விகிதம் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது 8.2% வட்டி கிடைக்கும். இதன் காலம் 21 ஆண்டுகள் என்றாலும் 15 ஆண்டுகள் முதலீடு செய்தாலே 21 ஆண்டுகளுக்கான வட்டி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு 80சி-ன் கீழ் விலக்கு பெற முடியும்.

இத்திட்டத்தை இடையில் நாம் எடுக்க முடியாது.. கணக்குதாரர் உயிரிழந்தால் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய் ஏற்பட்டால் மட்டுமே முன்கூட்டியே எடுக்க முடியும். இதில் நீங்கள் ஆண்டுக்கு 1 லட்சம் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் கழித்து 44.89 லட்சம் கிடைக்கும். அதாவது 15 லட்சம் முதலீடு செய்தால் போதும் வட்டியாக 29.89 லட்சம் நமக்குக் கிடைக்கும். பெண் குழந்தை வைத்திருப்போர் நிச்சயம் முதலீடு செய்ய வேண்டிய திட்டம் இது.

பொது வருங்கால வைப்பு நிதி: அடுத்த ரொம்பவே முக்கியமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது நமது எதிர்காலத்தை உறுதி செய்யும் திட்டம். மற்ற திட்டங்களில் முதல் மாதம் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறதோ.. அதே வட்டி தான் முதிர்வு காலம் வரை வழங்கப்படும். ஆனால் இதில் ஒவ்வொரு ஆண்டும் நிதியமைச்சகத்தின் பரிந்துரைப்படி வட்டி விகிதம் மாறும். இப்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதன் மொத்த காலகட்டம் 15 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 ரூபாய் அதிகபட்சம் 1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.

அதேநேரம் ஒரு ஆண்டில் குறைந்தபட்ச முதலீடான 500 ரூபாயைச் செலுத்தத் தவறினால் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். அடுத்து அபராதத் தொகை 50 ரூபாயை செலுத்திய பிறகு கணக்கு செயல்பாட்டிற்கு வரும். 15 ஆண்டுகள் தொடர முடியாதவர்கள் 5 ஆண்டுகளில் முதலீட்டில் 50% எடுத்துக் கொள்ளலாம். ஓராண்டைக் கடந்து முதலீடு செய்தால் நீங்கள் இதில் கடனை பெறலாம் என்பது இதன் சிறப்பு.. 36 மாதங்களுக்குக் கடனை திருப்பி செலுத்தினால் வெறும் 1% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். அதேநேரம் மிஸ் செய்தால் ஆண்டுக்கு 6% வட்டி வசூலிக்கப்படும்.

இதில் நீங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் திட்டம் முதிர்வடையும் போது உங்களிடம் 27 லட்சம் இருக்கும். அதாவது வட்டியாக மட்டும் 12 லட்சம் கிடைக்கும். இதில் உங்கள் முதலீட்டிற்கு 80சி-ன் கீழ் விலக்கு பெற முடியும். வட்டி தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பது மற்றொரு சிறப்பாகும்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+