பாசிட்டிவ் வந்திருச்சா.. மருத்துவமனையில் அட்மிட்டாக போறீங்களா.. மறக்காம கையோடு இதையும் எடுத்துக்கங்க
டெல்லி: கொரோனா வைரஸ் உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போகும் போது சில அத்தியாவசிய பொருட்களை கையோடு கொண்டு செல்ல வேண்டும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
கொரோனாவால் இந்தியாவில் 3.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 9,195 ஆக உயர்ந்துள்ளது. லாக்டவுன் தளர்த்தப்பட்டதால் கொரோனா மேலும் உச்சத்தை தொடும். இந்த நிலையில் மக்கள் சற்று தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது யாருக்கேனும் கொரோனா உறுதி என வந்துவிட்டது என வைத்துக் கொள்வோம். அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இருப்பதாக உறுதி செய்கிறார்கள். அந்த நேரத்தில் அவசர அவசரமாக அத்தியாவசிய பொருட்களை எடுத்து வைக்கும் போது பதற்றத்தில் எதையாவது விட்டு விடுவோம். எனவே முன்கூட்டியே நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சார்ஜர்
செல்போன் முதல் சார்ஜர் வரை என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்? அரசு மருத்துவமனையில் தண்ணீர் பாட்டில் கொடுக்க மாட்டார்கள். நோயாளியுடனான நேரடி தொடர்புக்கு தடை விதிக்கப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமே தண்ணீர் கொடுப்பர். அவர் பெரும்பாலும் வெந்நீர் கொடுப்பர். எனவே பிளாஸ்டிக் பாட்டில்களை விட மெட்டல் பாட்டில்களை கொண்டு செல்லலாம்.

சிட்ரஸ்
மருத்துவமனைகளில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். சில நேரங்களில் டீ கொடுப்பர். பசி எடுக்கும் போது சிக்கனையும் ஆர்டர் செய்ய முடியாது. கிச்சனிலிருந்தும் ஆர்டர் செய்ய முடியாது. அதனால் பழங்களை கொண்டு செல்லலாம். அதிலும் விட்டமின் சி இருக்கும் சிட்ரஸ் வகை பழங்களை கொண்டு செல்லலாம். இது தவிர நடுராத்திரியில் பசித்தால் கொரிப்பதற்கு பேரிச்சை பழம், உலர் பழங்களை கொண்டு செல்லலாம்.

ஆடை
டவல், சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். அரசு மருத்துவமனையில் இவற்றையெல்லாம் கொடுக்க மாட்டார்கள். உங்கள் சொந்த ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவீர்கள். நோயாளியின் நிலை மோசமடைந்தாலோ தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாலோ மட்டுமே அவர்கள் கொடுக்கும் ஆடையை அணிய வேண்டும்.

மாத்திரைகள்
உடைகளுடன் அதை துவைப்பதற்கு சோப்பை கொண்டு செல்லவும். ஏசி இல்லாமல் வெயில் காலத்தில் ஒரே உடையை போட்டிருக்க முடியாது. அதனால் அவ்வப்போது உடைகளை துவைத்து துவைத்து மாற்றிக் கொள்வது நல்லது. அது தவிர உங்களுக்கு தேவையான மருந்துகளை எடுத்துச் செல்ல வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டால் வழக்கமாக உண்ணும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா என மருத்துவரிடம் கேளுங்கள்.

புத்தகங்கள்
தனியாக நேரத்தை கடத்துவது மிகவும் கடினம். எனவே புத்தகங்கள், ஓவியம் வரைய தெரிந்தால் அதற்கான நோட்டுகள், ஆக்ட்டிவிட்டி புத்தகங்களை கொண்டு செல்லலாம். கடவுள் வழிபாட்டை வழக்கமாக கொண்டிருப்போர் பிரார்த்தனை புத்தகங்களை கொண்டு செல்லலாம். பக்தி பாடல்களை அவ்வப்போது செல்போனில் கேட்டு மகிழலாம். அப்போது தான் மன அமைதி பெறும்.












Click it and Unblock the Notifications