Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த" மாதிரி பொருட்களை நள்ளிரவு நேரத்தில் அதிகம் ஆர்டர் செய்யும் இளசுகள்.. இதுதான் டிரெண்டாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் இப்போது டெல்லியில் 24*7 டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. லேட் நைட் டெலிவரியில் மக்கள் எதை அதிகம் ஆர்டர் செய்கிறார்கள் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் உள்ள சில பொருட்கள் பெரும்பாலானோர் எதிர்பார்க்காதவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நவீனக் காலத்தில் எல்லாமே இணையம் என்றாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது எல்லாமே இணையத்திலேயே நம்மால் நொடிகளில் செய்ய முடிகிறது.

offbeat india

உணவு டெலிவரி: அதிலும் குறிப்பாக உணவு டெலிவரி இப்போது ரொம்பவே பிரபலமாகிவிட்டது. இப்போது பெரும்பாலானோர் நேரில் சென்று பார்சல் வாங்குவதே இல்லை என்றே சொல்லலாம். விரைவான டெலிவரி, வீடுகளுக்கே சுடச் சுட உணவு வந்துவிடுகிறது. மேலும், உணவை வாங்கிவிட்டுக் கூட பணம் செலுத்தலாம் என்று பல வசதிகள் இருப்பதால் பலரும் ஆன்லைனிலேயே விரும்பி உணவுகளை வாங்குகிறார்கள்.

இப்போது நம்மில் பலரும் வாரத்திற்கு சில முறையாவது இதுபோல ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்துவிடுவோம். அடுத்த கட்டமாக இப்போது ஆன்லைன் நிறுவனங்கள் மளிகை பொருட்களை வீட்டிலேயே டெலிவரி செய்யும் முறையைத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த சேவை இருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

அடுத்து மளிகை பொருள் டெலிவரி: ஆர்டர் செய்யும் பொருட்கள் 10- 15 நிமிடங்களில் வந்துவிடுவதால் கடைசி நேரத்தில் எதாவது மறந்துவிட்டால் இதில் தான் ஆர்டர் போடுகிறார்கள். இதிலும் பல்வேறு நிறுவனங்கள் களத்தில் இறங்கி போட்டிப் போட்டுக் கொண்டு டெலிவரி செய்கின்றன. தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் காலை 6 அல்லது 7 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே மளிகை பொருட்களை ஆர்டர் செய்ய முடிகிறது.

இந்த வகை டெலிவரியில் முக்கிய நிறுவனமாக இருப்பது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்.. இந்த நிறுவனம் சோதனை முயற்சியாக டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் 24 மணி நேரமும் இலவச டெலிவரி சேவையை அறிவித்து இருந்தது. எந்த நேரத்திலும் ஆர்டர் செய்து 10-15 நிமிடங்களுக்குள் பொருட்களைப் பெற முடியும் என்பதால் நள்ளிரவில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாம்.

வரவேற்பு: மேலும், நள்ளிரவு ஆர்டருக்கு கூடுதல் கட்டணங்கள் இல்லை என்பதால் இரவு நேரங்களில் விளையாட்டுப் பொருட்கள், கிப்ட்கள் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளன. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், கடைசி நேரத்தில் மறக்கும் பொருட்களை ஆர்டர் செய்ய இது உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே லேட் நைட் ஆர்டர் தொடர்பாக ஸ்விக்கி தரப்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை குறிப்பிட்ட பொருட்களின் ஆர்டர்கள் அதிகரிக்கிறதாம். அதாவது இரவு நேரங்களில் ஒரு வகை பொருட்களையும் காலை நெருங்க நெருங்க அந்த டிரெண்ட் மாறுவதாகவும் ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் உள்ள சில விஷயங்கள் நாம் எதிர்பார்க்காதவை.

டிரெண்ட் என்ன: இரவு 11 மணிக்கு மேல் சிப்ஸ், பூஜியா (ஒரு வகை நொறுக்குத்தீனி), ஐஸ்கிரீம்கள், பான் மசாலா உள்ளிட்ட பொருட்களின் ஆர்டர் அதிகமாக இருக்கிறதாம். மேலும், ஆணுறை போன்ற செக்ஸுவல் வெல்லன்ஸ் ப்ரோடுக்ட்களின் ஆர்டர்களும் அதிகரிக்கிறதாம். அதேநேரம் அதிகாலை நேரத்தில் ​​பால், முட்டை எனக் காலை உணவுக்குத் தேவையான பொருட்களின் ஆர்டர்கள் அதிகரிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த 24*7 டெலிவரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாடு முழுக்க உள்ள முக்கிய நகரங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலனை செய்து வருவதாக ஸ்விக்கி தரப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+