மொத்தமாக மாறும் இந்திய சட்டம்.. 3 மசோதாக்களில் திருத்தம் செய்யப்பட்டது என்ன? கசிந்த முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் உள்பட 3 சட்டங்களின் பெயர்களை மாற்றம் செய்வது மற்றும் சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்யும் மசோதாவை மீண்டும் நேற்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் தற்போது திருத்தப்பட்ட மசோதாக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 3 வகையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

What are the significant changes in 3 Criminal Law Bills? details here

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த சட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன. மேலும் அவ்வப்போது நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வந்து குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் தான் இந்த 3 சட்டங்களின் பெயர்களையும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா எனவும், குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சிய சட்டத்திற்குப் பதில் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்வது மற்றும் குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்கு கிடைக்கும் தண்டனைகளில் மாற்றம் செய்து புதிய 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன்பிறகு அந்த மசோதாக்களில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மசோதாக்கள் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழு மறுஆய்வு செய்து பல பரிந்துரைகளை வழங்கியது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் 3 சட்ட திருத்த மசோதாக்களும் புதிதாக தாக்கல் செய்யப்பட்டு பழைய மசோதாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த புதிய 3 சட்ட திருத்த மசோதாக்களும் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது கைது நடவடிக்கை, தண்டனை காலம், விசாரணை நடத்தும் முறை உள்பட பலவற்றில் பெரிய அளவில் மாற்றங்கள் வரும் என கூறப்படுகிறது.

அதாவது முந்தைய சட்டங்களுக்கும், தற்போது நடைமுறைக்கு வர உள்ள சட்டங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே மாற்றங்கள் செய்யப்பட்ட 3 சட்ட மசோதாக்களும் நேற்று நாடாளுமன்றத்தில் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதன் மீதான விவாதம் என்பது நாளை முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்த 3 சட்ட திருத்த மசோதாக்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்த முக்கிய தகவல் என்பது வெளியாகி உள்ளது.

அதன்படி நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான குற்றங்களை தீவிரவாத செயல்கள் என்ற பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணமான பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது என்ன? என்பது பற்றி விரிவான விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு பலாத்கார சம்பவத்தால் பாதிக்கப்படும் பெண்களின் பெயர்களை நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது பயன்படுத்தினால் தண்டனை விதிக்கவும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சில இடங்களில் வார்த்தைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் விபச்சாரம் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை குற்றமாக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் என்பது இந்த பரிந்துரைக்கு எதிரானதாக உள்ளது. இதனால் இதனை சட்டமாக்கினால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் மத்திய அரசு அதனை இந்த சட்ட திருத்த மசோதாக்களில் சேர்க்காமல் கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+