குஷன் சீட் + மின்னல் வேகம்.. வந்தாச்சு நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில்! என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா
டெல்லி: இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத்- பூஜ் இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தான் வந்தே மெட்ரோ ரயிலின் சிறப்புகள் என்னென்ன? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்தமாநிலமான குஜராத்துக்கு வந்துள்ளார். அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் அடக்கும். குறிப்பாக நம் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் கட்ச் மாவட்டத்தின் பூஜ் இடையே இயங்க உள்ளது. ஏற்கனவே சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் தான் இன்று அறிமுகம் செய்யப்படும் வந்தே மெட்ரோ ரயிலின் சிறப்புகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இன்று செயல்பாட்டுக்கு வரும் வந்தே மெட்ரோ ரயில் அகமதாபாத் - பூஜ் இடையே இயங்க உள்ளது. மொத்தம் 360 கிலோமீட்டர் தொலைவை 5 மணிநேரம் 45 நிமிடங்களில் கடக்க உள்ளது.
இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்க உள்ளது. பூஜ் பகுதியில் இருந்து கிளம்பும் ரயில் சனிக்கிழமையும், அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமையும் இயங்காது. மற்ற அனைத்து நாட்களிலும் இருமார்க்கமாக இந்த ரயில் இயங்கும். இந்த ரயில் பூஜ் ரயில் நிலையத்தில் காலை 5.05 மணிக்கு புறப்ட்டு காலை 10.50 மணிக்கு அகமதாபாத்தை வந்தடையும். மறுமார்க்கமாக மாலை 5.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11.20 மணிக்கு பூஜ் ரயில் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளது. இந்த ரயில் அஞ்சார், காந்திதாம், பாசாவ், சாமகியாலி, ஹால்வாட், த்ரங்கத்ரா, விரம்காம், சாந்லோடியா, சபர்மதி மற்றும் காலுபார் (அகமபாத் ஸ்டேஷன்) ஆகிய நிலையங்களில் நின்று செல்ல உள்ளார்.
இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது. மக்கள் அனைவரும் முன்பதிவு இன்றி ஏறி பயணம் செய்யலாம். அதாவது ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக கூட டிக்கெட் வாங்கி மக்களால் பயணிக்க முடியும். இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.30 ஆக இருக்கிறது. அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.430 ஆக உள்ளது. வாராந்திர மற்றும் பதினைந்து நாட்கள், மாதாந்திர சீசன் பாஸ்கள் உள்ளன.
மொத்தம் ரயிலில் 1,150 இருக்கை வசதிகள் உள்ளது. குஷன் சோபா வகையில் இருக்கைகள் உள்ளன. அதோடு ரயிலில் 2,058 பயணிகள் நின்றபடி பயணிக்கலாம். ஆட்டோமெட்டிக் கதவு, ரயிலின் இருபுறங்களிலும் இன்ஜின்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications