Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகமெடுக்கும் ப்ளூ காய்ச்சல்! எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன? சிகிச்சை எப்படி! உயிருக்கு ஆபத்தா

நாடு முழுக்க இப்போது பரவும் ப்ளூ காய்ச்சல் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இப்போது ப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஏன் இப்படிப் பரவுகிறது.. இதற்குக் காரணம் என்ன.. அறிகுறிகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் இப்போது பல்வேறு பகுதிகளிலும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே இது பரவலாக இருந்து வந்த நிலையில், இப்போது குறிப்பாகத் தமிழ்நாட்டில் பரவலாகப் பலருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் ஏற்கனவே நமது வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளை நாசம் செய்துவிட்டது. நாம் இப்போது தான் அதைப் போராடி வென்றுள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு காய்ச்சல் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ப்ளூ காய்ச்சல்

ப்ளூ காய்ச்சல்

இந்த ப்ளூ காய்ச்சல் என்றால் என்ன.. அது இப்போது பரவுவதால் ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பதை விரிவாகப் பார்க்கலாம். இந்தியா முழுவதும் இப்போது அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் மற்றும் ப்ளூ பாதிப்பு பதிவாகி வருகின்றன. இது இன்ஃப்ளூயன்ஸா ஏ-இன் துணை வகை H3N2 வைரஸால் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் நோயாளிகள் அதிகம் மருத்துவமனைகளில் அட்மிட் ஆக காரணமாக இருக்கிறது..

 அறிகுறிகள் என்ன

அறிகுறிகள் என்ன

இப்போது தான் தமிழகத்தில் பலருக்கும் இதுபோல ஏற்பட்டாலும் கூட கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே நாட்டில் பரவலாக இந்த பாதிப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. இந்த பாதிப்பு ஏற்படும் போது நமக்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படும். அதாவது பொதுவாகக் காய்ச்சலுடன் ஒரு இடைவிடாத இருமல் இருக்கும். பொதுவாக இவை சில காலம் மட்டுமே இருக்கும். ஆனால், சமீப காலங்களால் பொதுமக்கள் தங்களுக்கு நீண்ட காலம் அறிகுறிகள் தென்படுவதாகக் கூறுகின்றனர்.

 நீண்டகால அறிகுறிகள்

நீண்டகால அறிகுறிகள்

இது குறித்து டாக்டர் அனுராக் கூறுகையில், "நோய்த் தொற்று சரியாக சில காலம் ஆகும். அறிகுறிகள் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக இப்போது நோயாளி ப்ளூ பாதிப்பில் இருந்து குணமடைந்த பிறகும் கூட அவர்களுக்கு அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு இருக்கிறது" என்றார். மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளை விட H3N2 வைரஸ் பாதிப்பு அதிக நோயாளிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆக காரணமாக இருக்கிறது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

 ஆபத்து இல்லை

ஆபத்து இல்லை

இது தொடர்பாக டாக்டர் அனிதா ரமேஷ் கூறுகையில், "இன்ஃப்ளூயன்ஸாவின் இந்த புதிய வகை உயிருக்கு ஆபத்தானது இல்லை.. ஆனால் நோயாளிகளில் சிலருக்குச் சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில அறிகுறிகள் கோவிட் போலவே இருக்கின்றன.. இருப்பினும் டெஸ்ட் எடுத்தால் அவர்களுக்கு கோவிட் இல்லை. இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு தான். இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை" என்றார். இந்த ப்ளூ பாதிப்பு ஏற்படும் நோயாளிகள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்த அறிவிப்பையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

 இந்திய மருத்துவ சங்கம்

இந்திய மருத்துவ சங்கம்

அதேபோல இந்திய மருத்துவ சங்கமும் இது குறித்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் இருமல், சளி பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகளவில் ஆன்டிபாயாடிக்ஸ் மாத்திரைகளை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்களும் அறிகுறிக்கான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும் தேவையில்லாத ஆன்டிபயாடிக்ஸை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவிட் காலத்திலேயே நாம் அசித்ரோமைசின் மற்றும் ஐவர்மெக்டின் போன்ற ஆன்டிபயாடிக்ஸை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். இது எதிர்மறை ரிசல்டை தான் கொடுத்தது. ஆன்டிபயாடிக்ஸ்களை பரிந்துரைக்கும் முன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது பாக்டீரியா தொற்றா இல்லையா என்பதைக் கண்டறிவது அவசியம். அதன் பிறகே தேவையான பரிந்துரைகளைக் கொடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+