Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷா டிடிவி தினகரனிடம் என்ன சொன்னார் தெரியுமா? பணிந்தாரா எடப்பாடி பழனிசாமி? ரகசிய டெல்லி மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவு சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் டிடிவி தினகரன் சந்தித்து பேசியபோது, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அமமுக நிச்சயம் இடம் பெறும் என்று அமித்ஷா உறுதி தந்ததாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி,, அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனைகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

T T V Dhinakaran Amit Shah Edappadi Palaniswami

அதிமுக பாஜக கூட்டணி

இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லி ஏர்போர்ட் வந்த எடப்பாடி பழனிசாமியிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் சேர்க்க போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் பதிலளித்த எடப்பாடி "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் சேரும்; அதனை வெளிப்படையாக இப்போது சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து அறிவிப்போம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்றார்.

டிடிவி தினகரன் - அமமுக

இதன் மூலம், டிடிவி தினகரனுக்கு அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது, ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சேர முடியாது என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்ட முறையில் தெரிவித்தார்.

அதாவது டிடிவி தினகரனுக்கு நேரடி மறுப்பு சொல்லப்படவில்லை. தற்போதைய நிலையில், டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணியில் இறங்கி வந்து, அவர்களது நிலை தெளிவாக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக ஏற்கனவே இருப்பதால், இணைவதற்கு முன் சூழல் முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமித்ஷா என்ன பேசினார்

இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.. டெல்லியில் இருந்து வந்த அழைப்பின் பேரில், பெங்களூர் வழியாக, ரகசியமாக டெல்லிக்கு சென்றதாக தெரிகிறது..

டிடிவி தினகரன் அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து பேசியதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.. அப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது..

எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை இணைக்க வேண்டும் என்பது பாஜக டெல்லி தலைமையின் நீண்ட கால முடிவாக இருந்து வருகிறது.. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளாமலேயே இருந்தார்.. நேற்று முன்தினம் அமித்ஷாவுடன் நடத்திய சந்திப்பின்போதும், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தரப்பட்டதாக தெரிகிறது.

அதற்கு பிறகே டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க ஓரளவு இறங்கி வந்தாராம்.. காரணம், தினகரனை கூட்டணியில் சேர்த்தால், அதிமுக தலைமை பதவிக்கும் பாதிப்பு வரக்கூடும் என்பதாலேயே, பாஜகவின் அழுத்தத்துக்கு எடப்பாடி ஒப்புக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால், ஓபிஎஸ் விஷயத்தில் இன்னமும் பிடிவாதமாகவே இருப்பதாக தெரிகிறது.

என்ன பேசினார்கள்

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி சந்திப்புக்கு மறுதினமே, டிடிவி தினகரனுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வரவும்தான், உடனடியாக நேற்று கிளம்பி சென்றுள்ளார்.. அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நிச்சயம் இடம் பெற்று, தினகரனிடம் அமித்ஷா நம்பிக்கை தந்தாராம்..

அதுமட்டுமல்ல, அமித்ஷாவிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சீட் விவகாரமும் பேசப்பட்டதாக தெரிகிறது.. அந்தவகையில் இரட்டை இலக்கத்தில் அமமுகவுக்கு சீட் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் இணைவாரா?

காரணம், தென் தமிழகத்தில் டிடிவி தினகரனுக்கு இருக்கும் செல்வாக்கை பாஜக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான், , முக்குலத்தோர் வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் அமித்ஷா தரப்பில் தினகரனிடம் பேசப்பட்டதாம்..

டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க டெல்லி மேலிடம் விரும்பும் நிலையில், ஓபிஎஸ்ஸையும் கூட்டணிக்குள் பாஜக கொண்டு வருமா தெரியவில்லை. மொத்தத்தில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒருவிதமான அரசியல் அழுத்தத்தை கொடுப்பதற்காகவே இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+