நல்லா இருக்குறவங்களை கூட நோயாளியாக மாற்றும் காற்று மாசு! ஆனால், உ.பி முதல்வர் சொன்ன கருத்தை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததால், காற்றின் தரம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக மாசடைந்தது. இந்நிலையில், இது குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கும் கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் அப்படியான எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்தில்தான் வெடிக்க வேண்டும் என்றோ.. குறிப்பிட்ட வகை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றோ.. எதுவும் சொல்லப்படவில்லை. இதன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் 376 என்கிற அளவில் பதிவாகியிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த அளவுக்கு காற்று மாசடைந்தது கிடையாது.

Yogi Adityanath

இப்படி இருக்கையில் இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தால்.. காற்று மாசு அதிகரித்துவிடுகிறது என சிலர் கவலை தெரிவிக்கிறார்கள். மாசு ஏற்பட்டாலும் அது சீக்கிரமாகவே குறைந்துவிடும். எனவே இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால், ஊழல் செயல்கள் மூலம் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பையும் மாசுபடுத்தியவர்களை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. பொதுமக்கள் ஒரு நாள் பண்டிகையை கொண்டாடினால் போதுமே.. உடனே காற்று மாசு பெரிய பிரச்சனை போல பேசப்படுகிறது" என்று விமர்சித்திருந்தார்.

இத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. மக்கள் சந்தோஷமாக பட்சு வெடித்து தீபாவளியை கொண்டாடியது நல்ல விஷயம் என்றும், அயோத்தியில் நடைபெற்ற தீபோற்சவ கொண்டாட்டங்களின்போது நான் கூட பட்டாசு வெடிக்கும் நிகழ்வில் பங்கேற்றேன் என்று கூறியிருக்கிறார்.

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக வட இந்தியாவில் காற்று மிக கடுமையான அளவுக்கு மாசடைந்திருந்தது. குறிப்பாக டெல்லியில் காற்று மாசு (AQI) 376 என்கிற அளவுக்கு பதிவாகியிருந்தது. உத்தரப் பிரதேசம் டெல்லிக்கு பக்கத்தில் இருப்பதால், அங்கு பட்டாசு வெடிப்பதால் டெல்லியில் மாசு ஏற்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களான வாரணாசியில் AQI 274, கோரப்பூரில் AQI 261, லக்னோவில் AQI 245 என கற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகியிருந்தது. AQI 376 என்பது மிக மோசமான அளவு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

AQI 0-50 இருந்தால் நல்லது - உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது

AQI 51-100 இருந்தால் பரவாயில்லை - சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு லைட்டா பாதிப்பு இருக்கும்.

AQI 101-200 இருந்தால் மிதமான பாதிப்பு ஏற்படும் - ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

AQI 201-300 இருந்தால் மோசமானது - நீண்ட நேரம் இந்த காற்றை சுவாசித்தால் பெரும்பாலான மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும்.

AQI 301-400 இருந்தால் மிகவும் மோசமானது - ஆரோக்கியமானவர்கள் கூட நீண்ட நேரம் இந்த காற்றை சுவாசித்தால் நோய்கள் ஏற்படும். டெல்லியில் காற்றின் தரம் இந்த அளவுக்கு மோசமாக பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+