ரூ.2000 நோட்டுகளை மாற்றி தர மறுக்கும் சில வங்கிகள்.. முதல் நாளே இப்படியா.. பொதுமக்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல இடங்களில் வாடிக்கையாளர்கள் பல வித பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

ரிசர்வ் வங்கி கடந்த வாரம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது.. மக்கள் வங்கிகளுக்குச் சென்று தங்கள் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தனர்.

 What Banks Said in Day 1 Of ₹ 2,000 Exchange as there are Confusion Over ID and Form

இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை சமயத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், சில்லறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெகுமக்கள் அதிகம் பயன்படுவதாக ரூபாய் நோட்டுகளாகவே இது இருந்தது.

இந்தச் சூழலில் தான் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இன்று முதல் பொதுமக்கள் வங்கிகளில் சென்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. முதல் நாளான இன்றே மக்கள் பலரும் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்குப் படையெடுத்தனர்.

இருப்பினும், சில வங்கிகளில் குழப்பமான ஒரு சூழலே நிலவியது.. பான், ஆதார் போன்ற அடையாள அட்டைகள் தேவையா இல்லையா என்பதில் பல இடங்களில் குழப்பம் இருந்தது. சில இடங்களில் வங்கிகள் அடையாள அட்டைகள் கண்டிப்பாக வேண்டும் எனச் சொல்வதாகப் புகார்கள் வந்துள்ளன. அனைத்து வங்கிகளிலும் ஒரே செயல்முறை இல்லாமல் இருப்பதையே இது காட்டுகிறது.

பல வங்கிகள் நோட்டுகளை மாற்றித் தரவே மறுத்துவிட்டதாகவும் அதற்குப் பதிலாகப் பணத்தை டெபாசிட் செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதாவது வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை பெறுவதில் எந்தவொரு தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால், அதற்கு மாற்று ரூபாய் நோட்டுகளைத் தருவதற்குப் பதிலாகப் பணத்தை டெபாசிட் செய்யக் கூறுகிறார்கள். இதனால் மீண்டும் ஏடிஎம் சென்று எடுப்பது என வாடிக்கையாளர்களுக்கு வீண் சிரமமே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ரூ. 2,000 நோட்டுகளை மாற்றும் போது அல்லது டெபாசிட் செய்யும் போது எந்தவொரு ஆவணமும் அல்லது படிவமும் தேவையில்லை என்று தெளிவாக அறிக்கை வெளியிட்டிருந்தது. பல வங்கிகளிலும் இது குறித்து தனித்தனி வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தன.

 What Banks Said in Day 1 Of ₹ 2,000 Exchange as there are Confusion Over ID and Form

இதன் காரணமாகவே ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு நடைமுறை பின்பற்றப்பட்டன. தங்கள் வங்கியில் கணக்கு வைத்து இருக்காமல் ரூபாய் நோட்டுகளை மட்டும் மாற்ற வருவோரிடம் கோட்டக் வங்கி அடையாள அட்டையைக் கேட்கிறது.

ஆக்சிஸ் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யெஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை எந்தவொரு ஆணவத்தையும் அல்லது அடையாள அட்டையையும் கேட்பதில்லை. எச்எஸ்பிசி, ஃபெடரல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை கணக்கு இல்லாதவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும்போது அடையாள அட்டை தேவை எனக் குறிப்பிட்டுள்ளன.

ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகளில் நோட்டுகளை மாற்றக் குறிப்பிட்ட ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்... வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் மட்டுமே அத்துடன் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள அட்டையைக் கேட்டாலும் கூட பரவில்லை.. சில வங்கிகள் 2000 நோட்டுகளில் ஒரு நோட்டை கூட மாற்றித்தருவதில்லையாம். மாறாக 2000 நோட்டுகளை டெபாசிட் செய்யும்படி அறிவுறுத்துகின்றன என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

2000 ரூபாய் நோட்டுகளைப் பெறுவதில் ரிசரவ் வங்கி எந்தவொரு வழிகாட்டுதல்களையும் அறிவிக்கவில்லை. இது குறித்து நேற்று பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், "வங்கிகள் தங்கள் சொந்த விதிகளைப் பின்பற்றலாம். வழக்கமா டெபாசிட் செய்யும் போது என்ன நடைமுறையைப் பின்பற்றுவார்களோ.. அதை நடைமுறையைப் பின்பற்றலாம். சிறப்பு நடவடிக்கை எதுவும் தேவையில்லை" என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+