மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கு! இரண்டே வரியில் நிர்மலா சீதாராமன் நறுக் பதில்
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்தார். இருப்பினும், இந்தப் பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு உதவும் வகையில் எந்தவொரு திட்டமும் பெரிதாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மிடில் கிளாஸ் மக்கள் இந்த பட்ஜெட் மூலம் என்ன பலன்களை எல்லாம் பெறுவார்கள் என்பதையும் அவர் விளக்கினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.

இருப்பினும், இது பணக்காரர்களுக்கு மட்டுமே பலன் தரும் பட்ஜெட் என்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எதுவும் நன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
நிர்மலா சீதாராமன்: இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பளதாரர்கள் பயன்பெறும் வகையில் வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிலையான கழிவு தொகை ஆண்டுக்கு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மூலம் மிடில் கிளாஸ் மக்கள் பலன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
விளக்கம்: இது தொடர்பான கேள்விக்கு அவர் மேலும் கூறுகையில், "சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பலன்களைத் தரும் வகையில் வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மிடில் கிளாஸ் மற்றும் அதிக வருமானம் கொண்டவர்களுக்கு இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
அதிக வருமானம் ஈட்டுபவர் தனது மொத்த வருமானத்தில் ரூ. 7 லட்சத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. மீதமுள்ள தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். மேலும், நிலையான கழிவு தொகை ரூ. 50,000இல் இருந்து ரூ 75,000ஆக உயர்த்தப்பட்டுள்ளதும் நல்ல பலனைத் தரும்.
மானியம்: மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்க ஏதுவாக ரூ. 10 லட்சம் வரையில் கல்விக் கடன்களையும் அறிவித்துள்ளோம். இது தவிர, மலிவு விலையில் வீட்டுக் கடனுக்கான மானிய வட்டி விகிதங்களையும் அறிவித்துள்ளோம். எல்ஆர்எஸ் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொகையையும் உயர்த்தியுள்ளோம். இது வெளிநாடு செல்வோருக்குப் பெரியளவில் உதவும்.
மிடில் கிளாஸ் மக்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். குறிப்பிட்ட திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துவது சரியான போக்கு இல்லை.. பல வழிகளில் அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் சென்றடைகிறது என்பதை உறுதி செய்ய பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிடில் கிளாஸ் மக்களுக்கு நிறையத் திட்டங்கள் தேவை. அதை இந்த அரசு கொடுக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
"ரூ.17,500 இல்ல, அதுக்கும் மேல.." வருமான வரியில் இப்போது எவ்வளவு சேமிக்க முடியும்? இதை நோட் பண்ணுங்க
மத்திய பட்ஜெட்: கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கழிவு தொகையும் உயர்த்தப்பட்டன. இது மாத சம்பளம் பெறுவோருக்கு மிகப் பெரியளவில் உதவும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார். மேலும், அதில் வரி முறையைப் பின்பற்றுவோருக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வழக்கம் போல வரி இல்லை. அடுத்து அடுக்கில் ரூ. 3 லட்சம் - ரூ 6 லட்சம் பெறுவோருக்கு 5% வருமான வரி என்று இருந்த நிலையில், அது இப்போது ரூ 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல ரூ. 9 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கான வரி 10%ஆக இருந்த நிலையில், அதன் உச்ச வரம்பும் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து ரூ. 10 லட்சம் - ரூ 12 லட்சம் பெறுவோருக்கு 15% வரியும் ரூ. 12 லட்சம் - ரூ 15 லட்சமாக இருந்தால் 20% வரியும் ரூ. 15 லட்சத்திற்கு மேல் என்றால் 30% வரியும் செலுத்த வேண்டும். இதில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications