மோடிக்கு அருகே எடப்பாடி அமர.. காதுபட வந்து விழுந்த வார்த்தைகள்.. அப்படியே ஆடிய அதிமுக! என்ன நடந்தது?
டெல்லி: நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பிரதமர் மோடி அருகிலேயே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமர்ந்து இருந்தார். இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நடந்தது. எங்ககிட்டயும் சீப்பு இருக்கு என்பதை காட்டும் விதமாக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.
பாரதிய ஜனதா கட்சி
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு)
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு)
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (பசுபதி குமார் பராஸ் பிரிவு)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அப்னா தால் (சோனேலால்)
தேசிய மக்கள் கட்சி
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (Neiphiu Rio)
அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
மிசோ தேசிய முன்னணி
திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
நாகா மக்கள் முன்னணி
இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே)
அசோம் கண பரிஷத்
பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ் மாநில காங்கிரஸ்
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (ஓம் பிரகாஷ் ராஜ்பர்)
சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா)
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி
ஜனநாயக்க ஜனதா கட்சி
பிரஹர் ஜனசக்தி கட்சி
ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா
ஜன் சுராஜ்ய சக்தி கட்சி
குக்கி மக்கள் கூட்டணி (மணிப்பூர்)
ஐக்கிய ஜனநாயகக் கட்சி
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
நிஷாத் பார்ட்டி
அகில இந்திய என் ஆர் காங்கிரஸ்
இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா
ஜன சேனா கட்சி
ஹரியானா லோகித் கட்சி
பாரத தர்ம ஜன சேனா
கேரள காமராஜ் காங்கிரஸ்
புத்திய தமிழகம்
லோக் ஜனசக்தி கட்சி
கோர்கா தேசிய விடுதலை முன்னணி
ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டு இருந்தார். இந்த கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுக தமிழ்நாட்டில் அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்று கூட்டத்தில் பேசி உள்ளனர்.
முதலில் அரசல் புரசலாக அதிமுக வலிமை பற்றி எடப்பாடி காதுபட மற்ற கட்சிகள் பேசிக்கொண்டு இருந்தன. இந்த நிலையில்தான் கூட்டத்தின் போது வெளிப்படையாக 2024 தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெறும் மிக முக்கியமானது. அந்த வெற்றி என்டிஏ கூட்டணிக்கு முக்கியமானதாக இருக்கும். இதனால் தமிழ்நாட்டில் அதிமுக தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக மீதான இந்த நம்பிக்கையை கேட்டு அதிமுக தலைகள் உச்சி குளிர்ந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications