மோடி "உரிமையாக" சொன்ன அந்த வார்த்தை.. முகம் மலர்ந்த உதயநிதி.. ஆகா.. இது லிஸ்டுலையே இல்லையே!
தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாக உதயநிதி இதில் பேசி இருக்கிறார்.
டெல்லி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி உதயநிதியிடம் மிகவும் அன்பாக பேசியதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து திமுக அலுவலகத்திற்கு நேற்று சென்று திமுக நிர்வாகிகளுடன் பேசினார்.
அங்கே இருக்கும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தவர். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். இதையடுத்து அவர் நேற்று இரவு தமிழ்நாடு திரும்பினார்.

உதயநிதி
இந்த சந்திப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கினேன். அவர் தனது கருத்தை தெரிவித்தார். அதன்பின் நீட் தேர்வின் பிரச்சனைகளை அவரிடம் விளக்கினேன். தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அடுத்த போட்டிகளை தமிழ்நாட்டில்தான் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

விளையாட்டு மைதானங்கள்
தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாக பேசினேன். நாங்கள் அரசியல் பேசவில்லை. முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை பற்றி அவர் விசாரித்தார். அவரின் தாயார் மரணத்திற்கு நான் இரங்கல் தெரிவித்தேன். முதலமைச்சர் கோப்பை தொடரை நடத்துவது தொடர்பாகவும் பேசினோம். 25 கோடி ரூபாயில் இதை நடத்த உள்ளோம். 15 விளையாட்டு மைதானங்கள் இதனால் தமிழ்நாட்டில் முன்னேற்றம் அடையும் என்று அவரிடம் பேசினோம். இவை அனைத்தையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார், என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்,

சந்திப்பு மரியாதை
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் பல்வேறு முக்கியமான விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். முக்கியமாக நீட் விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். அதோடு.. உதயநிதி ஸ்டாலினை பார்த்த பிரதமர் மோடி எப்போது டெல்லி வந்தாலும் என்னை வந்து கண்டிப்பாக பார்க்க வேண்டும். அடிக்கடி சந்திப்போம் என்று கூறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு மொத்தமாக திடீரென பிளான் செய்யப்பட்ட சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் இல்ல திருமணத்திற்கு வந்த போது மோடியை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டு இருக்கிறார்.

நேரம் கேட்டது இல்லை
அவர் நேரம் கேட்டது செவ்வாய் கிழமை காலை சந்திப்பிற்காக. ஆனால் செவ்வாய் கிழமை காலை பிரதமர் மோடிக்கு வேறு அலுவல் திட்டங்கள் இருந்ததால் நேரம் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து மாலை சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படியே நேற்று மாலை 5.30 மணி அளவில் பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு சரியாக அரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீட் விலக்கு மசோதாவிற்கு உள்துறைதான் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். நீட் விலக்கிற்கு ஆதரவாக இந்த பரிந்துரையை உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடமும் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதோடு தேசிய அளவில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாகவும் பிரதமர் மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் பேசினார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
