உலக வரலாற்றில் மிகச்சிறந்த போராட்டமான மெரினா புரட்சி குறித்து தீர்ப்பில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம்
டெல்லி: உலக வரலாற்றில் நடந்த மிகச்சிறந்த போராட்டங்களில் ஒன்றான மெரினா புரட்சியில் ஜல்லிகட்டை அனுமதிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக சென்னை மெரினாவில் புரட்சி வெடித்தது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதுமே தன்னெழுச்சியமாக மக்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தை உலகமே உற்று கவனித்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்த்தது. தமிழர்கள் மொழிக்காகவும், கலாச்சாரத்திற்காவும், தங்கள் உரிமைக்காகவும் தன்னெழுச்சியாக ஒன்று சேரக்கூடியவர்கள் என்பதை அந்த போராட்டம் நிரூபித்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மக்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடி போராடினார்கள். மெரினாவில் கடல் பெரிதா, மக்கள் கூட்டம் பெரிதா என்றால், மக்கள் கூட்டமே பெரிது என்கிற அளவில் இருந்தது.
அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, எதிர்க்கட்சியாக இருந்த திமுக என எல்லா கட்சிகளுமே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தன. எல்லா கட்சிகளுமே போராட்டத்தை ஆதரித்தன. நடிகர் விஜய் முதல், கமல் வரை பல நடிகர் நடிகைகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்தனர். நேரிலேயே பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி உத்தரவு: இதையடுத்து நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.இதன்படி இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டமெல்லாம் நடந்தது. இறுதியாக சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவரும் தமிழக ஒப்புதல் அளித்தார். சட்டமும் அமலுக்கு வந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும்நடக்க தொடங்கிய பின்னர், பீட்டா அமைப்பு பல்வேறு விஷயங்களை சேகரித்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தீர்ப்பு என்ன: பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அரசியல சாசன அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லுபடி ஆகும் என தீர்ப்பு அளித்துள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் எந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் இல்லை என்றும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல் உலக வரலாற்றில் நடந்த மிகச்சிறந்த போராட்டங்களில் ஒன்றான மெரினா புரட்சியில் ஜல்லிகட்டை அனுமதிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று குறிப்பிட்டுள்ளது.

தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறுகையில், "கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம். ஜல்லிக்கட்டு தமிழக அரசின் கலாசார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்று சட்டப் பேரவை அறிவித்துள்ள நிலையில், நீதித்துறையால் வேறு எந்தக் கருத்தையும் எடுக்க முடியாது. அதை முடிவு செய்ய சட்டமன்றமே மிகவும் பொருத்தமானது" என்று கூறியது.
இதனிடையே வழக்கின் போது விலங்குகள் கேளிக்கை பொருள் அல்ல. அவற்றை வைத்து காட்சிப்படுத்தி துன்புறுத்த கூடாது: பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வைத்த வாதம் வைத்தது. அதற்கு நீதிபதிகள். குதிரை பந்தையம் நடக்கிறது, நாய்களுக்கான பேசன் ஷோ நடக்கிறது. அது எல்லாம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் பிற மாநிலங்களும் தங்களது கலாச்சாரத்தை காக்க இத்தகைய வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications