Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஹூவா மொய்த்ரா பதவிநீக்கம்! 500 பக்க அறிக்கையில் "இந்த" பாயிண்டை நோட் பண்ணீங்களா! இது இன்னும் முடியல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் கேள்விகளை எழுப்ப லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா அவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நன்னடத்தை குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கத் தொழிலதிபர் ஹிராநந்தானி என்பவரிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக எம்பி ஒருவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முதலில் எழுப்பி இருந்தார்.

 What Ethics Report On Trinamool congress MP Mahua Moitra cash for question charge

நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசை விமர்சித்து கேள்விகள் கேட்கத் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியிடம் இருந்து 2 கோடி ரூபாய் ரொக்கமும் பெற்றுக் கொண்டதாகப் புகார்கள் எழுந்தன.

500 பக்கங்கள்: இதையடுத்து இது தொடர்பாக பாஜக எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையில் நன்னடத்தை குழு அமைக்கப்பட்டு, அந்த குழு விசாரணை நடத்தியது. கடந்த மாதம் இந்த நன்னடத்தைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இதுபோன்ற தவறான செயல்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. மொத்தம் 500 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பல்வேறு கருத்துகள் இடம்பெற்றிருந்தது.

அந்த அறிக்கையில் தொழிலதிபர் ஹிராநந்தனியின் கூறியதாகவும் சில பாயிண்டுகள் இடம் பெற்றிருந்தது. அதில் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களைப் பரிசாக வழங்க வேண்டும் என கேட்டதாகவும் டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ பங்களாவைப் புதுப்பிக்க ஆகும் செலவு பயண செலவுகள், விடுமுறைக்கான செலவு என அனைத்தையும் மஹூவா மொய்த்ரா தன்னிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறியிருக்கிறார்.

முக்கியமான பாயிண்ட்: மேலும், அதில், "கேள்வி கேட்பதற்காகச் சட்டவிரோதமாகப் பொருட்களை ஏற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகள் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை மறுக்க முடியாதவை.. லாகின் தரவுகளைத் தர தொழிலதிபரிடம் இருந்து பரிசுகளை வாங்குவது தவறான செயல்.. இது நாடாளுமன்ற விதிகளை மீறுவதாக இருக்கிறது.

எனவே, இந்த நெறிமுறைக் குழு மஹூவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப் பரிந்துரைக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டப்படியும் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என இந்தக் குழு பரிந்துரைக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து சிபிஐ விசாரணை? அந்த அறிக்கையில் மொய்த்ரா கேள்விகளைக் கேட்கப் பணத்தையும் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும், "எங்கள் அமைப்பிற்கு குற்றவியல் விசாரணை நடத்துவதில் நிபுணத்துவமும் இல்லை என்பதால் மத்திய அரசு இதில் விசாரணை நடத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மொய்த்ரா இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுவரை பணம் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை எப்படிச் சுமத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று பிற்பகல் லோக்சபாவில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விரிவான விவாதம் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும், அதை ஏற்காமல் மஹூவா மொய்த்ராவை பதவிநீக்கம் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மஹூவா மொய்த்ரா தனது லோக்சபா லாகின் பாஸ்வோர்ட் தகவல்களைப் பகிர்ந்ததை ஒப்புக் கொண்டாலும் அது வழக்கமா அனைத்து எம்பிகளும் செய்வதுதான் எனக் கூறியுள்ளார். அதேநேரம் கேள்வி கேட்கப் பரிசுப் பொருட்களை வாங்கியதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தன் மீது சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்துத் தான் அஞ்சப்போவது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+