நாடாளுமன்றத்தில் கேமராக்களைத் திருப்பும்போது என்ன நடக்குது தெரியுமா? தயாநிதி மாறன் விளக்கம்
டெல்லி: டெல்லி எம்பி ரமேஷ் பிதுரி பேசிய போது பாஜகவினரின் நடவடிக்கைகளை எப்படி இருந்தது என்பது பற்றி திமுக எம்பி தயாநிதி மாறன் விளக்கம் அளித்துள்ளார். இதேபோல் நாடாளுமன்றத்தில் கேமராக்களைத் திருப்பும்போது என்ன நடக்கிறது? என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (இன்று) வரை நடந்தது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நேற்றைய முன்தினம் லோக்சபாவிலும், நேற்று ராஜ்யசபாவிலும் அனைவர் ஆதரவோடு நிறைவேறியது.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற லோக்சபா கூட்டத்தொடரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை எம்பிக்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள்தான் காரணம் என்பதால், எம்பிக்கள் அனைவரும் பாராட்டி பேசினார்கள்.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி பேசிய விஷயம் நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத ஒன்று. மொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தெற்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் கூறினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.
நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவரது முன்பும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதால் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்டார். அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லாவும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியை கடுமையாக கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.இனி ஒருமுறை இப்படி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேநேரம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி இந்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சில எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும் போது கேமராக்கள் திருப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேமராக்களைத் திருப்பும்போது என்ன நடக்கிறது? என்பது குறித்து திமுக எம்பி தயாநிதிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒரு சிறிய பகுதி மட்டுமே. எட்மபி ரமேஷ் பிதுரி எதிர்க்கட்சியிரை அநாகரிகமாகப் பேசியதை பாஜகவினர் ஊக்குவித்தனர். அவர் பேச்சைக் கண்டித்து தடுத்து நிறுத்தக்கூட அவர்கள் முற்படவில்லை..
ஆ.ராசாவுக்கு எதிராக அவதூறுகள் பேசிய போதும், சக பாஜக எம்பிக்கள் அதனை கட்டுப்படுத்தவில்லை.. இச்செயல்களே எங்களை தூண்டியது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எம்பி டானிஸ் அலிக்குஎ திராக அனுமதிக்க முடியாத வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்திய பாஜகவினருக்கு இது செயல்பான செயல்தான். இச்செயல்களை பாஜக தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications