"பதற்றமே இல்லை.. என் கண்ணை பார்த்து அவன் சொன்ன பகீர் விஷயம்!" கொலையாளி பற்றி சாரதாவின் தந்தை பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டையே அதிரச் செய்த டெல்லி படுகொலை சம்பவத்தில் கொலையாளி தன்னிடம் என்ன சொன்னான் என்பது குறித்த தகவல்களைச் சாரதாவின் தந்தை பகிர்ந்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தனது காதலியைக் காதலனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டில் இருக்கும் பலருக்கும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காதலியையே கொடூரமாகக் கொலை செய்த அந்த கொடூரன், அந்த பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி அதைத் தலைநகரில் பல்வேறு இடங்களிலும் போட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சமாக உள்ளது.

 கொடூரம்

கொடூரம்

மும்பையைச் சேர்ந்த சாரதா என்ற பெண்ணுக்கும் அப்தாப் அமீன் என்ற இளைஞருக்கும் இடையே டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி அந்த பெண் அப்தாப் அமீன் உடன் டெல்லியில் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். சாரதா திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து கேட்ட நிலையில், இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கொடூரமாகச் சாரதாவைக் கொலை செய்துள்ளார்.

 நேருக்கு நேர் மீட்டிங்

நேருக்கு நேர் மீட்டிங்


இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் அரங்கேறிய நிலையில், இப்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மகளைக் காணவில்லை என்று சாரதாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையே சாரதாவின் தந்தை குற்றவாளியை நேருக்கு நேர் பார்த்துக் குறித்தும் அப்போது அவன் சொன்னான் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்து உள்ளனர்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

அப்தாப் தன் முன்னால் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்றும் இருப்பினும் அதை தன்னால் கேட்கக் கூட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அவர் என் முன்னால் தான் வாக்குமூலம் அளித்தார். போலீசார் அப்தாபிடம் என்னைக் காட்டி, "இவரைத் தெரியுமா" என்று கேட்டார்கள். அதற்கு அவர் , "தெரியும்.. சாரதாவின் தந்தை' என்றார். அப்போது தான் சாரதா இந்த உலகத்தில் இல்லை என்றான்.

 கேட்கக் கூட முடியவில்லை

கேட்கக் கூட முடியவில்லை

அதைக் கேட்டதும் அங்கேயே நான் சரிந்தேன். அதற்குப் பின்னர், அவர் கூறியதை என்னால் கேட்கக் கூட முடியவில்லை. அருகே இருந்த போலீசார் தான் என்னை அழைத்துச் சென்றனர். சாரதாவை என்ன செய்தான் என அவர் கூறியதைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. எனக்குப் பேச்சு வரவில்லை. அப்தாப் கூறியதைக் கேட்கும் போதே எனக்கு அது மிகுந்த அச்சம் தருவதாக இருந்தது. ஆனால், கொலை செய்த அப்தாப் எந்தவொரு அச்சமும் இல்லாமல் ஈசியாக இதைச் சொன்னான்.

 சந்தேகம் வந்தது எப்படி

சந்தேகம் வந்தது எப்படி

கொலை சம்பவம் தெரிய வரும் முன்பு, சாரதா மாயமானது குறித்து அப்தாபிடம் கேட்டேன். அப்போது அவன் அளித்த பதிலே சந்தேகம் வரக் காரணமாக இருந்தது. சாரதா குறித்து ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை எனக் கேட்டதற்கு, நாங்கள் பிரேக் அப் செய்துவிட்டோம். பிறகு அவளைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கூலாக கேட்டான். அப்போது தான் அவன் மீது எனக்கு முதலில் சந்தேகம் வந்தது. அவன் தான் எனது மகளை எதோ செய்துவிட்டானன் என்பதை உணர்ந்தேன்.

 ரொம்பவே நார்மல்

ரொம்பவே நார்மல்

எனக்கு அவர்களின் உறவு குறித்து 2020ஆம் ஆண்டிலேயே தெரியும். சாரதா அப்தாபை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதெல்லாம் அவன் நார்மலாகவே இருப்பான். அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய போது, வீட்டில் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. எங்களை எதிர்ப்பை மீறிச் சென்றாள். இதனால் கடந்தாண்டு மே மாதம் முதலே எனது மகள் என்னுடம் பேசுவதில்லை. ஆனால், இப்படியொரு கொடூரம் நடக்கும் என முன்பே தெரிந்திருந்தால், நிச்சயம் எனது மகளிடம் பேசி புரிய வைத்திருப்பேன்" என்றார்.

 போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

நாட்டையே அதிரச் செய்துள்ள இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதலியின் உடலை அப்தாப் டெல்லியில் பல்வேறு இடங்களில் போட்ட நிலையில், அதை மீட்டுள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் அப்தாப் ஆஜர்படுத்தினர். மேலும், இருவரும் மீட் செய்த டேட்டிங் செயலியிடம் இருந்தும் தகவல்களைப் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+