4 வருட அக்னிபாத் ராணுவ பயிற்சிக்கு பிறகு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தால்? வாய்ப்பில்லை: மத்திய அரசு
டெல்லி: அக்னிபாத் என்ற திட்டத்தின் மூலம் முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் வீரர்களை சேர்க்கும் திட்டத்தை கண்டித்து ராணுவ பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அது குறித்த குழப்பங்களுக்கு மத்திய அரசு பதிலளித்து இருக்கிறது.
Recommended Video
சந்தேகம்: 4 ஆண்டு ஒப்பந்தத்துக்கு பின் ராணுவ வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா?

பதில்: 4 ஆண்டுகளுக்கு பின் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நிதியுதவி, கடனுதவியை அரசு வழங்கும். மேற்படிப்புக்கு விருப்பமுள்ளவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்றிதழும், மேற்படிப்பு பயிற்சியும் அளிக்கப்படும். மத்திய பாதுகாப்புப்படை, மாநில காவல்துறை பணிகளில் முன்னுரிமை தரப்படும். மற்ற துறைகளிலும் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
சந்தேகம்: ராணுவத்தில் சேர விரும்புவோருக்கு அக்னிபாத்தால் வாய்ப்பு குறையுமா?
பதில்: இத்திட்டத்தின் மூலம் முப்படைகளில் சேர்க்கப்படும் இளைஞர்கள் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக வீரர்கள் சேர்க்கப்படுவார்கள்.
சந்தேகம்: ராணுவ வீரர்களின் ஒற்றுமை பாதிக்கப்படுமா?
பதில்: ரெஜிமெண்ட் முறையில் மாற்றம் செய்யப்படவில்லை. அக்னிபாத்தால் ரெஜிமெண்ட் உறுப்பினர்களின் ஒற்றுமை அதிகரிக்கும்.
சந்தேகம்: முப்படைகளின் செயல்திறன் குறையுமா?
பதில்: பல நாடுகளில் அக்னிபாத் போன்றவை செயல்பாட்டில் இருக்கின்றன. இளமையான ராணுவத்தை அக்னிபாத் உருவாக்கும் என்பது உலகளவில் நிரூபனமாகி உள்ளது.
சந்தேகம்: 21 வயது இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்க முடியாத அளவு நம்பகத்தன்மை குறைவானவர்களா?
பதில்: உலக நாடுகள் பலவற்றின் ராணுவங்கள் இளைஞர்களை நம்பியே உள்ளன. இந்த திட்டத்தால் இளம் வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சந்தேகம்: அக்னிவீரர்கள் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்துவிடுவார்களா? அவர்களால் சமுதாயத்துக்கு தீங்கா?
பதில்: 4 ஆண்டுகள் சீருடை அணிந்த இளைஞர்கள் நம் நாட்டிற்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கக்கூடியவர்களாக உருமாறி வருவார்கள்.
சந்தேகம்: இத்திட்டம் குறித்து முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் ஆலோசிக்கவில்லையா?
பதில்: 2 ஆண்டுகள் ஆலோசிக்கப்பட்டது. ராணுவ அதிகாரிகளை கொண்ட தனிப்பிரிவுதான் இந்த திட்டத்தை வடிவமைத்தது. முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலர் இதை வரவேற்றுள்ளார்கள்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications