"காற்று போதும்.." சர்ருனு சீறி பாயும் புதிய ராக்கெட்டை சோதிக்கும் இஸ்ரோ! ஆனா ஒரு சிக்கல் இருக்கே
டெல்லி: இஸ்ரோ இன்றைய தினம் air-breathing propulsion system எனப்படும் காற்று-சுவாச உந்துவிசை அமைப்பு எனப்படும் தனித்துவமான தொழில்நுட்பத்தைச் சோதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளித் தளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த சோதனை நடக்கிறது. இந்த காற்று-சுவாச உந்துவிசை அமைப்பு என்றால் என்ன.. இது ஏன் முக்கியம் என்பதைப் பார்க்கலாம்.
மேம்பட்ட தொழில்நுட்ப வாகனம் என அழைக்கப்படும் இஸ்ரோவின் 'ரோகினி-560' சோதனை ராக்கெட்டில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் காற்று-சுவாச உந்துவிசை அமைப்பைப் பொருத்தி சோதனை செய்ய உள்ளனர்.

கடந்த 2016 ஆகஸ்ட் 28ம் தேதி இந்த காற்று-சுவாச உந்துவிசை அமைப்பு தொடர்பாக இஸ்ரோ முதலில் சோதனை நடத்தியிருந்த நிலையில், அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதைச் சோதிக்கிறது.
என்ன சிக்கல்: பொதுவாக எந்தவொரு ராக்கெட்டாக இருந்தாலும் அதில் இரண்டு டேங்குகள் இருக்கும். ஒரு டேங்கில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு டேங்கில் ஆக்சிஜன் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்தே ஆங்கிலத்தில் propellants- அதாவது உந்துசக்திகள் என அழைக்கப்படுகின்றன. எரிபொருளை எரிக்கத் தேவையான ஆக்சிஜனை இந்த டேங்க் தான் வழங்குகிறது. அதாவது ராக்கெட் மேல்நோக்கி செல்ல இந்த இரண்டு டேங்கும் முக்கியம். இதனால் ராக்கெட்டின் எடையை இந்த இரண்டும் கணிசமாகக் கூட்டி விடுகிறது என்பதே உண்மை.
அதேநேரம் இஸ்ரோ இப்போது சோதனை செய்யும் காற்று- சுவாச உந்துவிசை அமைப்புகளில், ராக்கெட்டில் ஒரே ஒரு டேங்க் மட்டுமே இருக்கும். அதில் எரிபொருள் மட்டுமே இருக்கும்.. ஆக்சிடைசர் எதுவுமே இருக்காது. இந்த ராக்கெட் எரிபொருளை எரிக்கத் தேவையான ஆக்சிஜனை வளிமண்டலத்தில் எடுத்துக் கொள்ளும். ஒரு டேங்க் குறைவாக இருப்பதால் இது ராக்கெட்டின் எடையைக் கணிசமாகக் குறைக்கிறது.
பலவீனம்: அதேநேரம் இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. அதாவது, இந்த தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் வளிமண்டலத்தில் இருந்து மட்டுமே எடுத்துக் கொள்வதால் இந்த ராக்கெட்டை வளிமண்டலத்தின் அடர்த்தியான அடுக்குகளுக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது பூமியில் இருந்து 70 கிலோமீட்டர் உயரம் வரை மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் சென்றால் ஆக்சிஜன் அளவு குறையும் என்பதால் அங்கு இந்த வகை ராக்கெட்டை பயன்படுத்த முடியாது.
உதவும்: உதாரணத்திற்கு இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட் எல்விஎம்-3 எடை சுமார் 640 டன். அதில் சுமார் 555 டன்கள் அல்லது 86% எரிபொருள் மற்றும் ஆக்சிடைசர் மட்டுமே இருக்கும். அதிலும் சுமார் 70 சதவீதம் அதாவது 385 டன்கள் ஆக்ஸிடைசர் மட்டுமே இருக்கும். அதாவது 640 டன் கொண்ட ராக்கெட்டில் அதிகபட்சம் 8 டன் மட்டுமே சாட்டிலைட்டை எடுத்துச் செல்ல முடியும்.
அது இதன் மொத்த எடையில் வெறும் 1.25% ஆகும். இதனால் காற்று-சுவாச உந்துவிசை பயன்படுத்துவதை எடையைக் குறைக்கும். 70 கிமீ மேல் சென்றால் பயன்படுத்த மட்டுமே ஆக்சிடைசரை எடுத்துச் சென்றால் போதும். இப்படிச் செய்தாலே ராக்கெட்டின் எடை கணிசமாகக் குறையும்.
என்ன தொழில்நுட்பம்: இந்த காற்று-சுவாச உந்துவிசை அமைப்பு ராம்ஜெட், ஸ்க்ராம்ஜெட் மற்றும் டூயல் மோட் ராம்ஜெட் என்று 3 வகைகளில் செயல்படுகிறது. இதில் ராம்ஜெட் என்பது உள்வரும் காற்றை ஆக்சிடைசராக மாற்றும்.. அந்த அழுத்தப்பட்ட காற்று எரிபொருளுடன் கலந்துவிடும். ராம்ஜெட் தொழில்நுட்பத்தால் சாதாரணமாகப் பூமியில் இருந்து கிளம்ப முடியாது எனவே, அது மற்றொரு ராக்கெட்டில் வைத்து சூப்பர்சோனிக் வேகத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இது ஒலியின் வேகத்தில் இயங்கும்
இந்த ராம்ஜெட்டின் மேம்பட்ட தொழில்நுட்பம் தான் ஸ்க்ராம்ஜெட். இந்த ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பம் மூலம் நாம் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லலாம். இந்த தொழில்நுட்பத்தை வைத்தே இப்போது இஸ்ரோ புதிய ராக்கெட்டை சோதனை செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில் ஆக்சிடைசர் தேவையில்லை எரிபொருள் உடன் காற்று இருந்தாலே போதும் ராக்கெட் சீறிய பாயும். ஆனால், பூமியில் இருந்து 70 கிலோமீட்டர் உயரம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இதன் ஒரு சிக்கலாகும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications