சீனாவுக்கு எதிராக "சென்னையை" மையமாக வைத்த "தெறி" பிளான்- தென்சீன கடலில் பறக்கும் இந்தியாவின் கொடி!
டெல்லி: சென்னையில் இருந்து தென்சீனா கடல் வழியே ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை இணைக்கும் கடல்வழி பாதையை தொடங்குவதில் மத்திய அரசு படுதீவிரமாக உள்ளது. இந்திய பெருங்கடலில் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு அது உரிமை கோருகிற தென் சீனா கடலிலேயே "ரஷ்யாவுடன்" இணைந்து நின்று பதிலடி தர தயாராகிறது இந்திய அரசு.
இந்தியாவை சுற்றிய நாடுகளின் துறைமுகங்களில் கால் பதித்து முத்துமாலை திட்டத்தை நிறைவேறி வருகிறது சீனா. இந்தியாவின் அத்தனை அண்டை நாடுகளையும் இந்தியாவிடம் இருந்து பிரித்து இந்திய பெருங்கடலில் தமது கடல் வழி வர்த்தக பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது சீனா. அண்மையில் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கான உறவை முறித்ததில் முதன்மை பங்கு வகித்தது சீனாதான் என்பது உலகம் அறிந்தது.

சென்னை- விளாடிவோஸ்டாக் கடல் வழி பாதை: சீனாவின் இத்தகைய முயற்சிகளுக்கு பதிலடிதான் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி வர்த்தக பாதையை தொடங்குவது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி பாதையை உருவாக்குவது என்பதுதான் மத்திய அரசின் திட்டம். அண்மையில் ரஷ்யா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தினார்.
2019-ல் மோடி சொன்னது என்ன?: 2019-ம் ஆண்டு விளாடிவோஸ்டாக் துறைமுக நகருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று, "இந்தியக் குடியரசில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கும் இடையில் கடல்சார் தகவல் தொடர்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியக் குடியரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும், ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் இடையில் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒப்பந்தமும்" அடங்கும். அப்போது பிரதமர் மோடி விளாடிவோஸ்டாக் துறைமுக நகருக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் 4 மாநில முதல்வர்களும் பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில் இந்திய வர்த்தக அமைச்சரும், நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களும், 150 வர்த்தகர்களும் விளாடிவோஸ்டாக் நகருக்கு வந்துள்ளனர். தூரக்கிழக்கின் சிறப்புத்தூதருடனும், தூரக்கிழக்கின் 11 ஆளுநர்களுடனும் நடத்தப்பட்ட சந்திப்பு நல்ல விளைவுகளைத் தந்துள்ளன. மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் இடையேயான உறவுகள் ஒரு கட்டமைப்பை நிறுவியுள்ளது. நிலக்கரி, வைரம், சுரங்கம், அரிய கனிமங்கள், வேளாண்மை, வனம், காகிதம் மற்றும் காகிதக்கூழ், சுற்றுலா போன்றவை பல புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளன. பகுதிகளுக்கு இடையேயான தொடர்பை அதிகப்படுத்த தற்போது சென்னைக்கும், விளாடிவோஸ்டாக் நகருக்கும் இடையே கடல்வழி போக்குவரத்துக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்
🔹🇮🇳 & 🇷🇺 fortifying mutual trade & commerce
— Ministry of Ports, Shipping and Waterways (@shipmin_india) September 20, 2023
🔹Eastern Maritime Corridor unlocking opportunities
🔹Chennai-Vladivostok sea route (EMC) to reduce transit time from 40 days to 16 days
🔹@PortofChennai opens trade opportunities in Southeast Asia🔹Access to Russia’s Far East pic.twitter.com/zS7MKcSucO
2021-ல் முன்னேற்றம்: இதன் பின்னர் 2021-ல் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பில் இந்தியா தொடர்ந்து பங்கேற்று வருகிறது. கொரோனா காலத்துக்குப் பின் இந்த கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்சார் வழித்தடம் முன்னேறி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச வடக்கு-தெற்கு வழித்தடத்துடன் கூடிய இந்த இணைப்பு திட்டம், இந்தியா மற்றும் ரஷ்யாவை நெருக்கமாக்கும்
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்: கடந்த செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார அமைப்பு மாநாட்டில் மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் பங்கேற்றார். அம்மாநாட்டிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரங்களான ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் மற்றும் இந்தியாவின் சென்னை ஆகியவற்றுக்கு இடையே மாற்று வர்த்தகப் பாதையை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்: இதன் தொடர்ச்சியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது ரஷ்யா பயணத்தின் போது அதிபர் புதினுடனும் சென்னை- விளாடிவோஸ்டாக் துறைமுகங்களை இணைக்கும் கடல் வழி வர்த்தகப் பாதை திட்டம் குறித்து விவாதித்துள்ளார்.
என்ன பயன்கள்: தமிழ்நாட்டின் சென்னை- ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகங்கள் இடையேயான கடல்வழிப் பாதையால் என்ன நன்மைகள் எனக் கேட்கிறீர்களா?
- தற்போது மும்பை துறைமுகமானது இருந்து ஈரான் வழியாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறப்படும் கப்பல்கள் ஈரான் துறைமுகத்தை சென்றடைந்து சரக்குகளை இறக்கும். அங்கிருந்து ரயில் வழியாக செயின்ட்பீட்டர் பர்க் நகருக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படும்.
- தற்போதைய கடல்வழி வர்த்தகப் பாதையானது மொத்தம் 8675 நாட்டிகல் மைல்களைக் கொண்டது. சுமார் 16,000 கி.மீ தொலைவு. இந்த கடல்வழி பாதையில் செல்ல 40 நாட்கள் ஆகும்.
- புதியதாக உருவாக்கப்படும் சென்னை- விளாடிவோஸ்டாக் துறைமுகம் இடையேயான கடல்வழி வர்த்தகப் பாதை மொத்தம் 5647 நாட்டிகல் மைகளைக் கொண்டது. சுமார் 10,000 கி.மீ தொலைவு. இந்த கடல்வழி பாதையில் பயணிக்க 16 முதல் 24 நாட்கள் ஆகும்.
-சென்னை- விளாடிவோஸ்டாக் கடல்வழி வர்த்தகப் பாதை சீனா தமக்கு சொந்தமாக உரிமை கோருகிற தென்சீனா கடல் வழியே மேற்கொள்ளப்படும்.
- சென்னை- விளாடிவோஸ்டாக் கடல் வழி வர்த்தகமானது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இந்திய பெருங்கடல் மற்றும் தென்சீனா கடல் வழியே நடைபெறும்.
- ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் பிராந்தியமானது ஏராளமான கனிம வளங்களைக் கொண்டது. எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, வைரம், தங்கம், பிளாட்டினம், டங்ஸ்டன் என அதிக வளம் கொண்ட நிலப்பரபு.
- சீனாவின் பட்டுப்பாதை அல்லது முத்துமாலை திட்டங்களுக்கு பதிலடி தரக் கூடிய கடல்வழி வர்த்தகப் பாதையாக இருக்கும்.
- ரஷ்யாவின் தூர கிழக்கு ரஷ்யா எனும் கொள்கையை வலுப்படுத்தக் கூடியதாகவும் சென்னை- விளாடிவோஸ்டாக் கடல்வழி வர்த்தகப் பாதை அமையும்.
- தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகியவையும் இந்த கடல் வழி வர்த்தகத்தால் பெரும் பயனடையும்.
- இத்திட்டத்தால் சென்னை துறைமுகம் மிக பிரம்மாண்டமான வளர்ச்சி அடையும். அத்துடன் சென்னையை மையமாகக் கொண்ட பல புதிய தொழில்துறைகள் விஸ்வரூபம் எடுக்கும்.
- கிழக்கு கடலோர துறைமுகங்களான விசாகப்பட்டின, கொல்கத்தா ஆகியவையும் பலன் பெறும்.
- ஜப்பான், தென்கொரியாவுடனான வர்த்தக உறவும் மேம்பாடு அடையும்.
தென் சீனா கடலில் இந்திய கொடி பறக்குதா?












Click it and Unblock the Notifications