இந்தியாவை கண்காணிக்கும் "ஐந்து கண்கள்".. போனை போட்ட கனடா ட்ரூடோ.. யார் இந்த ஃபைவ் ஐஸ் உளவுக்குழு?
டெல்லி: இந்தியா கனடா மோதலில் ஃபைவ் ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.
சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.

அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.
ஜோ பிடன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்று திரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர் உலக நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
உளவு அமைப்பு: இந்த நிலையில்தான் இந்தியா கனடா மோதலில் ஃபைவ் ஐஸ் உளவுக்குழு அதாவது Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாக இதில் கூட்டு அறிக்கை வெளியிடவில்லை என்றாலும் இதில் விசாரணை வேண்டும் என்பதில் இந்த குழு தீர்க்கமாக உள்ளது.
ஐந்து கண்கள் என்பது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு உளவுத்துறை கூட்டணியாகும். இது 1946 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணியானது கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு தொடர்பான அமைப்பு ஆகும். முதலில் அமேரிக்கா - ஐரோப்பா இடையிலான இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் யுனைடெட் கிங்டம்-யுனைடெட் ஸ்டேட்ஸ் கம்யூனிகேஷன் இன்டலிஜென்ஸ் ஆக்ட் (UKUSA) ஒப்பந்தம் என்று இது அழைக்கப்பட்டு அதன்பின் மற்ற 3 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டது.
தற்போது இந்த குழு Five Eyes intelligence alliance என்று அழைக்கப்படுகிறது. இந்த 5 நாடுகள் தங்களுக்கு உள்ளேயே உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ளும். முக்கியமான உளவு விஷயங்களை பகிர்ந்து அதில் நடவடிக்கை எடுக்கும். பெரிய விசாரணைகளில் உதவும். 2005 வரை இந்த குழு ரகசியமாக இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா - ஐரோப்பா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த குழு உருவாக்கப்பட்டது.
மேற்கு உலகின் அதி தீவிர ரகசியங்களை இந்த நாடுகள் தங்களுக்கு பகிர்ந்து கொள்ளும். இதை பகிர STONEGHOST network என்ற நெட்வொர்க்கை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தகவல்கள் ககசியாமல் மிக கட்சிதமாக இவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த அமைப்புதான் இந்தியாவிற்கு எதிரான புகாரில் கூட்டறிக்கை வெளியிட வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் என்று கனடா கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த நாடுகள் இதில் கூட்டறிக்கை வெளியிடவில்லை. மாறாக இதில் நாடுகள் தனி தனியாக விசாரணை அவசியம் என்று கூறி உள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகியவை தனி தனியாக இதில் கண்டிப்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். விசாரணை இதில் மிக முக்கியம் என்று கோரிக்கை வைத்துள்ளது. இது இந்தியாவிற்கு பிரஷராகி உள்ளது.
அமெரிக்கா நிலைப்பாடு: இந்த நிலையில்தான் இந்தியா - கனடா மோதல் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது. இதனால் இந்தியாவிற்கு பிரஷர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையில், "பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். கனடா அரசுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் விசாரணை தொடர வேண்டும் .குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியமானது. அதனால் நாங்கள் விசாரணையை ஆதரிக்கிறோம் என்று வெள்ளை மாளிகை இந்தியாவிற்கு எதிரான தொனியில் பேசி உள்ளது.
அதோடு இன்று வெளியிட்ட அறிக்கையில், கனடா நடத்தும் காலிஸ்தானி தலைவர் படுகொலை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், இந்த கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பயங்கரவாதி கொலையில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை "ஆழ்ந்த கவலையில் உள்ளது" என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்து உள்ளார். இதில் உண்மைகளை கொண்டு வர இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications