Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டு நன்கொடை பெற என்ன விதிகள்?? அன்னை தெரசா மிசினரி உரிமம் ரத்தா?? விரிவான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், நேற்றைய தினம் மம்தாஅன்னை தெரசா மிஷனரிஸ் பதிவிட்ட ஒற்றை ட்வீட் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதாவது கிறிஸ்துமஸ் நாளில் அன்னை தெரசா மிஷனரிஸின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இதனால் 22,000 நோயாளிகள், பணியாளர்கள் உணவும் மருந்துகளும் இல்லாமல் தவிப்பதாகவும் ட்வீட் செய்திருந்தார்.

மேலும், சட்டம் தமது கடமையைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் மனிதாபிமானம் என்பது அதைவிட மேலானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்னை தெரசா மிஷனரிஸின் சார்பில், தங்கள் வங்கிக் கணக்குகளை யாரும் முடக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

 மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு விளக்கம்

அதேபோல மத்திய அரசு சார்பிலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், " Foreign Contribution (Regulation) Actகீழ் வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான அனுமதியைப் புதுப்பிக்கக் கோரும் Missionaries of Charity-ன் விண்ணப்பம் டிசம்பர் 25-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சட்டவிதிகளைப் பின்பற்றாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து Missionaries of Charity-யிடம் இருந்து விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. அதேநேரம் எந்த ஒரு வங்கிக் கணக்கையும் மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன Foreign Contribution (Regulation) Act? எப்போது முதல் இந்தச் சட்டம் அமலில் உள்ளது என்பதை விரிவாகப் பார்க்கலாம்

 உரிமம் ரத்து

உரிமம் ரத்து

Foreign Contribution (Regulation) Act எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010இன் கீழ் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 13 அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பழங்குடியினர் பகுதிகளில் FCRAஇன் கீழ் செயல்படும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை எனத் தொடர்ந்து பல தகவல்கள் கிடைத்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் குறைந்தது இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

 Foreign Contribution (Regulation) Act என்றால் என்ன?

Foreign Contribution (Regulation) Act என்றால் என்ன?

வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் சட்டமே Foreign Contribution (Regulation) Act ஆகும். இதுபோன்ற வெளிநாட்டு நன்கொடைகள் உள்நாட்டு பாதுகாப்பைப் பாதிக்காது என்பதை உறுதி செய்கிறது. 1976இல் இச்சட்டம் முதன்முதலில் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் 2010இல் இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விரும்பும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

 விதிகள் என்ன

விதிகள் என்ன

அத்தகைய அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் FCRAஇன் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும். இது ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். மேலும் அவர்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினால் அதைப் புதுப்பிக்கலாம். சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாசார நோக்கங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் ஆண்டு வருமானத்தைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2015இல் உள் துறை அமைச்சகம் இது தொடர்பாக புதிய விதிகளை அறிவித்தது. அதில் வெளிநாட்டு நன்கொடை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கக் கூடாது. மேலும் நட்புறவு நாடுகளின் உறவுகளைப் பாதிக்கக் கூடாது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்காது என்று NGOகள் உறுதிமொழியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் கீழ் தான் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இயக்க வேண்டும். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைக் கண்காணிப்பு அமைப்பு எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்யலாம் என்ற வகையில் இருக்க வேண்டும்.

 வெளிநாட்டு நன்கொடைகளை யார் பெற முடியாது?

வெளிநாட்டு நன்கொடைகளை யார் பெற முடியாது?

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் வெளிநாட்டு நன்கொடைகள் பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2017ஆம் உள் துறை அமைச்சகம் நிதி மசோதா வழியின் மூலம், FCRA சட்டத்தை திருத்தியது. அதன்படி அரசியல் கட்சிகள் இந்தியாவில் துணை நிறுவனமாகச் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் இந்தியர்கள் 50%க்கு மேல் பங்குகளை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி பெறலாம் எனச் சட்டம் திருத்தப்பட்டது.

 சட்ட திருத்தம்

சட்ட திருத்தம்

கடந்த 2004 முதல் 2012 வரை இங்கிலாந்தை மையமாகக் கொண்ட வேதாந்தா குழுமத்திடம் இருந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநாட்டு நிதியைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவை சட்டவிரோதமான நன்கொடைகள் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னரே இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 வெளிநாட்டு நிதியை வேறு எந்த வழிகளில் பெறலாம்?

வெளிநாட்டு நிதியை வேறு எந்த வழிகளில் பெறலாம்?

முன்கூடிய அனுமதி கோரி விண்ணப்பித்தும் வெளிநாட்டு நன்கொடையைப் பெறலாம். என்ன தொகை, யாரிடம் இருந்து, எதற்காகப் பெறப்படுகிறது என்பது குறித்து இதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதன் கீழ் நன்கொடை பெறும் தொண்டு நிறுவனம் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860, இந்திய அறக்கட்டளைச் சட்டம், 1882, அல்லது நிறுவனங்கள் சட்டம், 1956இன் பிரிவு 25 கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும், அந்த குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்தும் கடிதம் தேவை. கடந்த 2017இல் கட்டுப்பாட்டு எம்பிகளுடன் லாபி செய்ய "வெளிநாட்டு நிதியை" பயன்படுத்தியதாகக் கூறி அடிப்படையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுச் சுகாதார ஆலோசனைக் குழுக்களில் ஒன்றான Public Health Foundation of India உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 'முன் அனுமதிக்கான' பிரிவுக்கு மாற்றப்பட்டது.

 எப்போது உரிமம் ரத்து செய்யப்படும்?

எப்போது உரிமம் ரத்து செய்யப்படும்?

உள் துறை அமைச்சகம் கணக்குகளை ஆய்வு செய்யும்போது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தொடர்பாகத் தகவல்களைப் பெற்றால் FCRA உரிமத்தை 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாம். இதில் முடிவு எடுக்கப்படும் வரை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புதிய நன்கொடை எதையும் பெற முடியாது. மேலும் உள் துறை அனுமதியின்றி வங்கிக் கணக்கில் உள்ள தொகையில் 25%க்கு மேல் பயன்படுத்த முடியாது. உள் துறை அமைச்சகத்தால் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய முடியும்.

 கடந்த காலங்கள்

கடந்த காலங்கள்

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 2011 முதல் மொத்தம் 20,664 சங்கங்கள் வெளிநாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது, ஆண்டு வருமானத்தைச் சமர்ப்பிக்காதது மற்றும் வேறு நோக்கங்களுக்காக வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவது போன்ற விதி மீறல்களுக்காக ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 11 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 49,843 தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

 சர்வதேச நன்கொடையாளர்கள்

சர்வதேச நன்கொடையாளர்கள்

அமெரிக்காவை மையமாகக் கொண்ட காம்பாஷன் இன்டர்நேஷனல், ஃபோர்டு அறக்கட்டளை, World Movement for Democracy, Open Society Foundations மற்றும் the National Endowment for Democracy போன்ற வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நன்கொடையாளர்களைக் கண்காணிப்பு பட்டியல் மற்றும் 'முன் அனுமதி' பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உள் துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி சங்கங்களுக்கு நிதி அனுப்ப முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+