தேசத் துரோகம் இனி தேசத்துக்கு எதிரான சதி.. 3 புதிய குற்றவியல் சட்டங்கள் என்றால் என்ன? 14 பாயிண்ட்ஸ்!
டெல்லி: நாட்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன. 150 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சிக் கால 3 குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு மத்திய அரசு உருவாக்கிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து என்ன என்று பார்க்கலாம்.
நடைமுறைக்கு வரும் 3 குற்றவியல் சட்டங்கள்:
1. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (Indian Penal Code IPC- ஐபிசி) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023- "இந்திய நியாய சட்டம் 2023"

2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் ( Criminal Procedure Code- CRPC சிஆர்பிசி) பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -"இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023"
3. இந்திய ஆதாரச் சட்டம், 1872-க்கு மாற்றாக (Indian Evidence Act, 1872- ஆதார சட்டம்) பாரதிய சாக்ஷய சட்டங்கள் இருக்கும்- "இந்திய சாட்சியச் சட்டம் 2023"

"இந்திய நியாய சட்டம் 2023": பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள், தேவைகளுக்கு முன்னுரிமை; பெண்கள், குழந்தைகள், நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களில் சகிப்பின்மை கொள்கையை வலியுறுத்துகிறது.

"இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம் 2023": பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் நிர்வாக மையங்கள்- பாதுகாப்பு அதிகாரிகள்- ஆலோசகர்கள்- தங்குமிடங்கள் மூலம் உதவி, பாதுகாப்பு, இழப்ப்பீடு, மறு குடியமர்வு நடைமுறையை வலுவாக்குகிறது.
"இந்திய சாட்சியச் சட்டம் 2023": சைபர் தடய அறிவியல், டிஎன்ஏ தடய அறிவியல், புலனாய்வு, நீதிமன்ற விசாரணையின் போது மின்னணு சாதனம் மூலம் சாட்சியத்தை பதிவு செய்தல்- சமர்ப்பித்தல் ஆகிய நவீன நடைமுறைகளை அறிமுகம் செய்கிறது.

3 புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள் என்ன?
- மின்னணு ஊடகங்கள் மூலம் புகார் அளித்துவிட்டு 3 நாட்களுக்குள் சென்று காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
- எந்த காவல் நிலையத்திலும் குற்றங்களுக்கு எதிராகப் புகார் பதிவு செய்ய ஏற்பாடுகள்
- மின்னணு- டிஜிட்டல் சான்றுகள், இதா ஆதாரங்களைப் போல இனி செல்லுபடியாகும்.

- வழக்குகளில் தேடுதல்- கைபற்றுதலின் போது எடுக்கப்படும் ஆடியோ- வீடியோ பதிவுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- விசாரணை அறிக்கையை 90 நாட்களுக்குப் பெற பாதிக்கப்பட்டோருக்கு உரிமை உண்டு
- கைது செய்யப்படுகிறவரின் விவரங்கள் காவல் நிலையத்தில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்
- 18 வயது நிறைவடையாத மைனர் சிறுவர்/ சிறுமியரை விற்பது- வாங்குவது கொடுங்குற்றம்

- 18 வயது நிறைவடையாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தால் ஆயுள் அல்லது தூக்கு தண்டனை
- சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டோர், வல்லுநர்கள், பாதிக்கப்பட்டோர் மின்னணு ஊடகங்கள் மூலம் ஆஜராகலாம்.

- 7 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்க வகை செய்யும் வழக்குகளில் தடவியல் சோதனை இனி கட்டாயம்.
- தேசத் துரோகம் என்பது இனி தேசத்துக்கு எதிரான சதி வழக்காக கருதப்படும்.
- கும்பல் படுகொலைகள்- பறிமுதல்களும் இனி குற்றப் பிரிவுகளில் சேர்க்கப்படும்.

- ஒரு வழக்கின் விசாரணை தொடங்கி 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்
- விசாரணை முடிவடைந்தால் 15 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்






-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முடிவு.. விஸ்வரூபம் எடுக்க போகும் தங்கம்.. சீக்கிரமே எல்லாம் மாறும் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications