பொருளாதாரம் வேற லெவல்! காரணம் பிரதமர் மோடி.. சர்டிபிகேட் கொடுக்கும் 48% பேர்! ஆனாலும் ஒரு சிக்கல்
டெல்லி: மத்திய பாஜக அரசு பொருளாதாரத்தைக் கையாண்ட விதம் குறித்து மக்கள் கூறியுள்ள பதில்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் கவிழ்ந்தது. அங்கு பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்தது.
ஆனால், இது நடந்து 40 நாட்களுக்குள் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த பீகார் அவர்கள் கையைவிட்டுச் சென்றுவிட்டது. நிதிஷ்குமார் பாஜக உடனான கூட்டணியை முறித்தார்.

பீகார் குழப்பம்
அங்குத் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் இணைந்து மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சியை அமைத்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பாஜகவுக்கு கடும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இந்தியா டுடே மற்றும் சி- வோட்டர்ஸ் இணைந்து நடத்திய மூட் ஆப் தி நேஷன் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

சர்வே
அதில் தலைவர்களுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு & அதிருப்தி, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. அதன்படி மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. கொரோனா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியப் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ளது.

மத்திய அரசு
இப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாண்ட விதம் குறித்து மக்கள் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் மத்திய அரசின் கொள்கைகள் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாக 51% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல 10% பேர் சிறு, குறு தொழில்களுக்கு ஆதரவாகவும் தலா 9% பேர் விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர்.

48% பேர் ஆதரவு
ஒட்டுமொத்தமாகத் தேசத்தின் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது, சுமார் 48 சதவீதம் பேர் பாஜக அரசு பொருளாதாரத்தை சூப்பராக கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 29 சதவீதம் பேர் மோசமாகக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தனியாகப் பார்க்கும்போது நல்லதாக இருந்தாலும் கூட, கடந்த ஜனவரி 2021 முதலே கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து சரிந்தே வருகிறது. கடந்த ஜனவரி 2021இல் 67 சதவீதம் பேர் மத்திய அரசு பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியம்
அதேபோல பீகார் குழப்பத்திற்குப் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக வெல்லும் இடங்கள் 286ஆக இருக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக இது 307ஆக இருந்த நிலையில், பாஜக 21 இடங்களை இழந்துள்ளது. இது பெரிய பின்னடைவு இல்லை. இருப்பினும் இரு ஆண்டுகளில் தேர்தல் நடக்கும் நிலையில், இதே டிரெண்ட் தொடர்ந்தால் அது பாஜக மீண்டும் வெல்வதைக் கடினமாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications