Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கி கணக்கில் வந்து விழும் ரூ.2000! PM Kisan என்றால் என்ன? யாருக்கு கிடைக்கும்? அப்ளை செய்வது எப்படி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு நிதியுதவி திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில் முக்கியமானது PM Kisan Saman Nidhi. பிஎம் கிஸான் திட்டத்தின் 19வது தவணை நிதி இன்று வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.22 ஆயிரம் கோடி நிதி நேரடியாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பிஎம் கிஸான் திட்டம் குறித்தும் இதற்கு எப்படி அப்ளை செய்வது என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

நமது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வது விவசாயம் தான். இப்போது என்ன தான் ஐடி துறை நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வந்தாலும் விவசாயம் தான் அதிகபட்ச மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் துறையாக இருந்து வருகிறது.

PM Kisan farmers Narendra Modi

பிஎம் கிஸான்

இதனால் விவசாயிகளை ஆதரிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள், நிதியுதவிகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதில் முக்கியமானது தான் பிஎம் கிஸான் என்று அழைக்கப்படும் PM Kisan Saman Nidhi. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வழங்கப்படும். அதாவது ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும்.. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இது நேரடியாக வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் பிஎம் கிஸான் நிதி வழங்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இதனை அறிவித்தார். அதன் பிறகு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. அதன்படி பிஎம் கிஸான் திட்டத்தின் 19வது தவணையாக ரூ.22,000 கோடி இன்று ரிலீஸ் ஆகிறது. அதன்படி தகுதியுள்ள 9.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2000 டெபாசிட் செய்யப்படும்.

e-KYC கட்டாயம்

அதேநேரம் 19வது தவணை நிதியைப் பெற விவசாயிகள் e-KYCஐ முடிக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தளத்தில், "பிஎம் கிஸான் திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். ஓடிபி-அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYCக்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

செக் செய்வது எப்படி?

உங்களுக்கு இந்த முறை பணம் வருமா என்பதை செக் செய்ய முதலில் இதன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும். அங்கு Beneficiary list என்று ஒன்று இருக்கும். அதில் சென்று எந்த மாநிலம், எந்த மாவட்டம், எந்த பிளாக், எந்த கிராமம் என்பதைச் சரியாகத் தேர்வு செய்து Get report என்பதை கிளிக் செய்யவும். அப்போது Beneficiary list நமக்குக் கிடைக்கும். அதில் உங்கள் பெயர் இருந்தால் நிச்சயம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும்.

பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி

முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அதில் 'New Farmer Registration' என்பதை கிளிக் செய்து ஆதார் கார்டு விவரங்களைக் கொடுத்து உள்ளே நுழையவும். அடுத்த டேப்பில் பல்வேறு விவரங்களைக் கேட்டிருப்பார்கள்.. அவை அனைத்தையும் நிரப்பி Yes என்பதை கிளிக் செய்யுங்கள். தொடர்ந்து மீண்டும் ஒரு விண்ணப்பம் வரும் அதையும் நிரப்பினால் போதும். தேவையான விவரங்கள் அனைத்தும் உங்கள் செல்போனுக்கு வரும் என்றாலும் கூட இதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்வதும் உதவியாக இருக்கும்.

யாருக்கெல்லாம் பிஎம் கிசான் நிதி கிடைக்கும்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பலன் பெற சில கண்டிஷன்கள் உள்ள. அதாவது அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். விவசாயம் செய்யத் தேவையான நிலத்தை வைத்திருக்க வேண்டும். சிறு அல்லது குறு விவசாயியாகவே இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவராக இருந்தால் ரூ.10,000க்கு மேல் ஓய்வூதியம் பெறக்கூடாது. வருமான வரி தாக்கல் செய்யும் நபராக இருக்கக்கூடாது. இந்த கண்டிஷன்களை பூர்த்தி செய்யும் நபர்கள் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+