Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லையில் மட்டுமில்லை.. சைபர் ஸ்பேஸிலும் அத்துமீறல்! எய்ம்ஸ் ஹேக்கிங்.. பின்னணியில் சீனா? பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் சீனப் படைகள் நம்மிடம் அத்துமீறி பின் பின்வாங்கியது நமது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை சைபர் அட்டாகில் சீனாவுக்கு தொடர்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதலான ஒரு போக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான ஒரு உறவு இல்லை.. அதிலும் கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தது.

இதற்கிடையே கடந்த டிச.9ஆம் தேதி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியுள்ளது. சீனா ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து விரட்டியுள்ளது.

 சைபர் அட்டாக்

சைபர் அட்டாக்

நல்வாய்ப்பாக இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.. இதற்கிடையே எல்லையில் மட்டுமின்றி இணையதளம் வாயிலாகவும் இந்தியா மீது சீனா குறிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸில் சமீபத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த நவ. கடைசி வாரம் நடந்துள்ளது இதில் தரவுகளை முடக்கிய ஹேக்கர்களின் ஐபி முகவரிகள் ஆய்வு செய்த போது, அவை ஹாங்காங் மற்றும் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இருந்து வந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எய்ம்ஸ்

எய்ம்ஸ்

எய்ம்ஸ் சர்வர்களில் பல முக்கிய அரசியல்வாதிகளின் டேட்டா தரவுகள் உள்ளன. இந்த சைபர் ஹேக்கிங்கில் சுமார் 3-4 கோடி நோயாளிகளின் டேட்டாவுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் சில வாரங்கள் எய்ம்ஸ் டேட்டா முடங்கியிருந்தது. எய்ம்ஸ் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேக்அப் சர்வர் ஒன்றை வைத்திருந்தது. இரு நாட்களுக்கு முன்பு, இதில் இருந்த தரவுகள் உடனடியாக மருத்துவமனை சர்வருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சைபர் தாக்குதல் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

 சீனா லிங்க்

சீனா லிங்க்

அவர்கள் Protonmail மின்னஞ்சலை பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் "dog2398" மற்றும் "mouse63209" ஆகிய இரண்டு ஐடிக்களை பயன்படுத்தியுள்ளனர். என்கிரிப்ட் செய்யப்பட்ட தரவுகள் இந்த இரண்டு ஐடிக்களுக்கு தான் அனுப்பப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஐடிக்களும் நவம்பர் முதல் வாரத்தில் ஹாங்காங்கில் உருவாக்கப்பட்டது என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இருப்பினும், இது வெறும் முதல் லேயர் தான் என்றும் அடுத்தடுத்த லேயர்களை ஆய்வு செய்தால் மட்டுமே முழு உண்மை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மொத்தம் 12 சர்வர்கள்

மொத்தம் 12 சர்வர்கள்

வாம்மாக்ரி, மிமிகாட்ஸ் மற்றும் ட்ரோஜன் ஆகிய மூன்று ரான்சம்வேர்கள் இந்த சைபர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்ஐசி எனப்படும் தேசிய தகவல் மையத்தின் ஐந்து சர்வர்களும், எய்ம்ஸில் உள்ள 7 சர்வர்களும் இந்த ரான்சம்வேர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஹேக்கிங் தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த தகவல்படி பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பேக்அப் டேட்டா உள்ள போதிலும், இது எய்ம்ஸ் மருத்துவமனையில் பல அன்றாட வேலைகளைக் கடுமையாகப் பாதித்து உள்ளது.

 பாதிப்பு

பாதிப்பு

புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வேறு சில சேவைகளில் மேனுவலாக தரவுகள் எழுதிச் சேகரிக்கப்படுகிறது. இதனால் அதிக காலதாமதம் ஏற்படுகிறது. அதேபோல சைபர் அட்டாக் நடந்த காலகட்டத்தில் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தவர்களின் முடிவுகளும் இன்னும் முழுமையாக வரவில்லை. இந்த ஹேக்கிங் சம்பவத்தால் இ-மருத்துவமனை சேவை தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புறநோயாளிகள் பிரிவு மட்டுமின்றி அவசர சிகிச்சையும் கூட பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 சிரமம்

சிரமம்

இந்த சைபர் தாக்குதலுக்கு யார் காரணம், அவர்கள் எங்கிருந்து இந்த சைபர் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறித்த தகவல்களை விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைக்கு சர்வர் முகவரியை மட்டுமே கண்டுபிடித்துள்ளனர். இதற்காகச் சீனாவில் இருந்து யார் அல்லது எந்த அமைப்பும் ஹேக்கிங் செய்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. நோயாளிகளின் டேட்டா தவிர வேறு எதாவது முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இரு பெரிய குறைபாடு

இரு பெரிய குறைபாடு

எய்மஸ் சைபர் தாக்குதலில் அங்கு இரண்டு பெரிய பாதுகாப்பு குறைபாடுகள் இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனையில் டேட்டா சேகரிப்பு என்பது பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் சைபர் தாக்குதல் நடந்தால் ஒரு அடுக்கு தரவுகள் மட்டுமே சிக்கும். இப்போது அனைத்து தரவுகளும் ஒரே அடுக்கில் இருந்ததால் தான், அனைத்தையும் ஒரே நேரத்தில் ஹேக் செய்துவிட்டார்கள். அடுத்து எய்ம்ஸ் நிர்வாகத்திடம் சைபர் தாக்குதலைத் தடுக்கும் துறை தனியாக இல்லை. இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து தனியாக சைபர் துறையை உருவாக்கும் முயற்சியில் எய்ம்ஸ் நிர்வாகம் இறங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+