Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை நோட் பண்ணீங்களா? சசி தரூர் கழுத்தில் தொங்கும் மர்ம கருவி! அடடே இதுக்கு தான் அது யூஸ் ஆகுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கழுத்தில் அணிந்து உள்ள இந்த குறிப்பிட்ட கருவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் குறித்து சமீப காலங்களில் பல செய்திகள் வெளிவருகின்றன. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் தேர்தல் என்பதால் இது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் சசி தரூரை வீழ்த்தி கார்கே காங்கிரஸ் தலைவர் ஆனார்.

சசி தரூர்

சசி தரூர்

பலரும் சசி தரூருக்கு எதிராக ஓப்பனாக பேச தொடங்கிய போதிலும், அவர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கடைசி வரை பின்வாங்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், சசி தரூர் குறித்து இப்போது ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் எப்போதும் கழுத்தில் அணிந்து இருக்கும் இந்த கருவி பலரது கவனத்தையும் ஈர்க்கும்.

கழுத்தில் தொங்கிய கருவி

கழுத்தில் தொங்கிய கருவி

ஆனால், இது என்னவென்று நம்மில் பலருக்கும் தெரியாது. முதலில் பார்க்கும் பலரும் இதை ஸ்மார்ட்போன் அல்லது இயர்போன் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், பார்க்க இது இயர்போன் போல இருக்காது. சிறிய மொபைல் போல இருக்கும் இது என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து இணையத்திலும் கூட பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஏர் ப்யூரிஃபையர்

ஏர் ப்யூரிஃபையர்

இந்தச் சூழலில் தான் நெட்டிசன் ஒருவர் அது என்னவென்று நேரடியாக சசி தரூரையே டேக் செய்து கேட்டார். அப்போது அவர் அளித்த பதில் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. பார்க்கச் சிறு மொபைல் போல இருக்கும் அது உண்மையில் காற்று சுத்திகரிப்பான் எனப்படும் ஏர் ப்யூரிஃபையர் என்று அவரே ட்விட்டரில் பதில் அளித்து உள்ளார். காற்றில் பரவும் வைரஸ்கள் மற்றும் காற்று மாசில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவர் எப்போதும் இதை கையோடு எடுத்துச் செல்கிறார்.

எப்படி வேலை செய்யும்

எப்படி வேலை செய்யும்

சசி தரூர் அணிந்து இருக்கும் இந்த ப்யூரிஃபையர் ஏர் டேமர் ஏ310 ப்யூரிஃபையர் மாடல் ஆகும். இது பேட்டரிகள் மற்றும் யுஎஸ்பி என இரண்டிலும் இயங்கக் கூடியது ஆகும். இதுபோன்ற மாடல்கள் தனி நபர்கள் பயன்படுத்தும் ப்யூரிஃபையர் ஆகும். இதற்குள்ள பிரத்தியேக காற்று வடிகட்டி இருக்கும். இதை அணிந்து இருக்கும் நபரைச் சுற்றியுள்ள காற்றைத் தூய்மைப்படுத்தும் இந்த கருவி, காற்றில் இருக்கும் நெகடிவ் அயனிகளையும் நீக்கும்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

நீங்கள் மற்றொன்றைக் கவனித்து இருக்கலாம். அதாவது கேரளாவில் இருக்கும் போது சசி தரூர் இதை அணிய மாட்டார். எப்போதெல்லாம் அவர் டெல்லி செல்கிறாரோ அப்போது மட்டுமே இந்த கருவியை அவர் அணிவார். டெல்லியில் காற்று மிக மோசமாகச் சுவாசிக்க முடியாத அளவுக்கு உள்ளதாலேயே இதை அங்கு மட்டும் அணிவதாகவும் சசி தரூர் தெரிவித்து உள்ளார்.

டெல்லி

டெல்லி

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமானதாக உள்ளது. சமீபத்தில் அங்குக் காற்றின் தரம் 317 என்ற அளவில் மிக மோசமானதாக இருந்தது. இதன் காரணமாகத் தீபாவளி காலத்தில் அங்குப் பட்டாசுகள் வெடிக்கவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அண்டை மாநிலங்களில் பயிர் எரிப்பு விவாகரத்திலும் புகையைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+