சந்திரயான் 3க்கு வரும் ஆபத்து.. அதுவும் நிலவுக்கு வெளியே இருந்து வருகிறதாம்.. உற்று கவனிக்கும் இஸ்ரோ
டெல்லி: சந்திரயான் 3 நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் நிலையில், அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் நிலவுக்கு வெளியே இருந்து இந்த ஆபத்து சந்திரயான் 3ஐ சூழ்ந்துள்ளதாம்.
இஸ்ரோவின் லட்சிய திட்டமான சந்திரயான்-3 லேண்டர், ரோவர் இப்போது நிலவில் செயலற்ற நிலையில் இருக்கிறது. கடந்த அக். 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கிய ரோவர் தொடர்ச்சியான செய்த நிலையில், அது நிரந்தர ஸ்லீப் மோடில் இப்போது இருக்கிறது.

அந்த விண்கலம் பூமிக்குத் திரும்பாது.. அது சந்திரனின் மேற்பரப்பிலேயே இனி எப்போதும் இருக்கும். விக்ரம் லேண்டர் தனது பணியைச் சிறப்பாகச் செய்துவிட்டு, மகிழ்ச்சியாக இப்போது ஸ்லீப் மோடில் இருப்பதாகவே இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறியுள்ளார்.
ஆபத்து இருக்கு: விண்கலம் ஸ்லீப் மோடில் இருந்தாலும் கூட இப்போது அதற்கு சில ஆபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதுவும் நிலவுக்கு வெளியே இருந்து அந்த ஆபத்துகள் வருகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இப்போது நிலவில் இருக்கும் நிலையில், நிலவின் மேற்பரப்பில் இருக்கும் மைக்ரோமீட்ராய்டு அதற்குச் சிக்கலாக மாறியிருக்கிறது. மைக்ரோமீட்ராய்டு என்பது சிறுகோள் அல்லது விண்வெளியில் உள்ள பாறைகளின் சிறு சிறு துகளாகும்.
இது தொடர்பாக இஸ்ரோ மூத்த அதிகாரிகள் கூறுகையில், "நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து மைக்ரோமெட்டிராய்டு செயல்பாடுகள் இருக்கிறது. நமது சந்திரயானை இவை தாக்கும் ஆபத்து இருக்கிறது. சந்திரனின் மேற்பரப்பில் இருந்த அப்பல்லோ விண்கலம் உட்பட பல விண்கலங்களுக்கும் கடந்த காலங்களில் இதேபோல நடந்துள்ளது. இது இஸ்ரோவுக்கும் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
பிரச்சினை ஏன்: மணிபால் பல்கலைக்கழக பேராசிரியரும் இயக்குநருமான பி.ஸ்ரீகுமார் கூறுகையில், "பூமியைப் போலச் சந்திரனில் வளிமண்டலம் அல்லது ஆக்சிஜன் இல்லை. இதனால் அரிப்பு ஏற்படும் ஆபத்து இல்லை. அதேநேரம் சிறுகோள்களின் பகுதிகள் நிலவைத் தாக்கும் அபாயம் இருக்கிறது. இது அங்குள்ள சாட்டிலைட்களை பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. இருப்பினும், இது குறித்த துல்லியமான டேட்டா நம்மிடம் இல்லை. இதனால் என்ன நடக்கும் என்று நமக்கு உறுதியாகத் தெரியாது" என்றார்.
சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படும் தூசி லேண்டர் மற்றும் ரோவரின் மேற்பரப்பில் படியும் ஆபத்து இருக்கிறது. தூசி தானே என அலட்சியமாக இருக்க முடியாது. ஏனென்றால் பூமியில் தூசி படியும் போது, காற்று அடிக்கும் போது அவை தானாக மறந்துவிடும். ஆனால், நிலவில் காற்று இல்லாததால் சந்திர தூசி அப்படியே அந்த பொருட்களில் ஒட்டிக்கொள்ளும். அமெரிக்காவின் அப்பல்லோ ஏவுகணைகளிலும் கூட இப்படி தான் தூசி அதை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
அமெரிக்கா ஏவுகணை: அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நிலையில், அப்போது விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களால் நிலவின் மேற்பரப்பிலேயே அப்பல்லோ மிஷன் கருவிகளை விட்டு வந்தனர். அவை தான் இப்போது நிலவின் அடர்த்தியான தூசிகளால் சூழ்ந்துள்ளது. அப்பல்லோ சாட்டிலைட்டே கூட தெரியாத அளவுக்கு அடர்த்தியாகத் தூசி ஏற்பட்டுள்ளது. அதேபோன்ற ஒரு நிலை சந்திரயான் 3க்கும் ஏற்படும் என்றே அஞ்சப்படுகிறது.
சந்திரயான் 3 ஏவுகணை தற்போது வரை பாதுகாப்பாகவே இருக்கிறது.. இருப்பினும், வரும் நாட்களில் அதற்கு என்ன ஆகும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications